நேக்கா வளைந்து வளைந்து சண்டை போடும் ஸ்ருதி ஹாசன்…வைரல் வீடியோ !
சென்னை : ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சண்டை பயிற்சி எடுக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் கொடி கட்டி பறந்து வருகிறார் ஸ்ருதி.
இவர் நடிப்பதில் மட்டும் அல்லாமல் பாட்டு, நடனம், இசை போன்ற பல துறைகளில் கை தேர்ந்தவர்.

அறிமுகம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர், சமீபத்தில் கூட சர்ச்சைக்குரிய வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து இருந்தார்.

விஜய்சேதிபதியுடன் ஜோடி
தமிழ், தெலுங்கு, இந்தி என படு பிஸியாக நடித்து வரும் இவர், விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மிகவும் நெருக்கமாக
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன், கெளஹாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் ஆர்டிஸ்ட் மற்றும் ராப் பாடகரை காதலிப்பதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த ஸ்ருதிஹாசன், எனக்கு பிடித்த மனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பகிர்ந்து இருந்தார். இது மிகவும் பரவலாக பேசப்பட்டது.
அசால்டா சண்டை
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அசால்டாக சண்டை பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.இதில், ஒரு கயிறை இடையில் ஒருவர் பிடித்துக்கொண்டு இருக்க, ஸ்ருதி அந்த கயிறுக்கு அந்தப்பக்கமாகவும், இந்த பக்கமாகவும் சண்டை போட்டுக்கொண்டே வருகிறார். இந்த வீடியோ செம வைரலாகி லைக்குகளை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











