Shruti Haasan: முதல் முறையாக ஏஆர் ரஹ்மான் இசையில் இணைந்த ஸ்ருதிஹாசன்.. அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் காதலிக்க நேரமில்லை. திரைப்படங்களை இயக்குவதில் இருந்து விலகி இருந்த கிருத்திகா உதயநிதி மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நிலையில் காதலிக்க நேரமில்லை படம் கோடைக் கொண்டாட்ட ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியான நிலையில் அதில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் மிகவும் நெருக்கமாக இருந்ததை பார்க்க முடிந்தது. இந்தப் படம் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

இதை வெளிப்படுத்தும்வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் நித்யா மேனனின் பெயர் முதலில் இடம் பெற்றிருந்தது. கடந்த 1964ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் காதலிக்க நேரமில்லை. தற்போது அந்தப்படத்தின் டைட்டிலுடன் ஜெயம் ரவி -கிருத்திகா உதயநிதி கூட்டணியில் காதலிக்க நேரமில்லை படம் உருவாகி வருகிறது. முன்னதாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்கள் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில், காதலிக்க நேரமில்லை படமும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Actress Shruti haasan joined with Music composer AR Rahman for Jayam Ravis Kadhalikka Neramillai movie song

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 16ம் தேதி வெளியான படம் சைரன்/ இந்த படத்தில் இருவேறு கெட்டப்புகளில் ஜெயம் ரவியை பார்க்க முடிந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் கைதியாக அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியிருந்தார். படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் ஜெயம்ரவியுடன் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஆறு படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜெயம் ரவி.

Actress Shruti haasan joined with Music composer AR Rahman for Jayam Ravis Kadhalikka Neramillai movie song

காதலிக்க நேரமில்லை படம்: இதில் பிரதர், ஜெனி, காதலிக்க நேரமில்லை படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அதிலும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் காதலிக்க நேரமில்லை படம் கோடை கொண்டாட்டமாக வரும் மே மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு உருவாகி வரும் இந்த படத்தில் நித்யா மேனனுக்கு அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் நித்யா மேனன் பெயர் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கு சான்றாக அமைந்துள்ளது.

நாயகிக்கு முக்கியத்துவம்: படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனனின் ரொமான்டிக் ஸ்டில் வெளியானது. நீண்ட காலங்களாக படங்களை இயக்காமல் இருந்த கிருத்திகா உதயநிதி, இந்த படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். யோகி பாபு, வினய்ராய், லால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் தற்போது ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதன் முறையாக ஸ்ருதிஹாசன் இந்த படத்தின் மூலம் ஏஆர் ரஹ்மானுடன் இணைத்துள்ளார். இந்த பாடலுக்கான வரிகளை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார்.

ஏஆர் ரஹ்மானுடன் இணைந்த ஸ்ருதிஹாசன்: தற்போது ஏஆர் ரகுமான் உடன் ஸ்ருதிஹாசன், சினேகன், கிருத்திகா உதயநிதி இணைந்துள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X