நீங்க வெர்ஜினா.. வில்லங்கமான கேள்விக்கு காட்டமான பதிலளித்த ஸ்ருதிஹாசன்!
சென்னை : நடிகை ஸ்ருதிஹாசன் தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் படங்களில் நடித்து வருகிறார்.
சில காலங்கள் சொந்த பிரச்சினைகள் காரணமாக நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த அவர் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. தெலுங்கில் அடுத்தடுத்து சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவுடன் நடித்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன.
அடுத்ததாக கேஜிஎப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாசுடன் சலார் படத்தில் நடித்து வருகிறார். ஹாலிவுட்டிலும் தி ஐ என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். சில சொந்த பிரச்சினைகள் காரணமாக கடந்த சில காலங்களாக நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தாமல் இருந்த ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன. தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து முடித்துள்ளார். வால்டர் வீரய்யா, வீரசிம்ஹ ரெட்டி போன்ற படங்கள் கடந்த மாதங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

சலார் படத்தில் ஸ்ருதிஹாசன்
அடுத்ததாக கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் பிரபாசுடன் இணைந்து நடித்துவருகிறார் ஸ்ருதிஹாசன். இந்தப் படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் ட்ரெயிர் உள்ளிட்ட அப்டேட்களை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைதவித தி ஐ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த வெற்றிப் படங்கள்
தன்னுடைய தந்தையின் ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்தரமாக அறிமுகமான ஸ்ருதிஹாசன், தொடர்ந்து தெலுங்கில் லக் படம் மூலம் நாயகியாக உயர்ந்தவர். தொடர்ந்து தமிழில் சூர்யாவுடன் 7ம் அறிவும் படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தனுஷ், விஷால், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழில் லாபம் படத்தில் இறுதியாக நடித்துள்ள ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் அமையவில்லை.

முன்னணி நடிகை + சிறந்த பாடகி
முன்னணி நடிகையாக மட்டுமில்லாமல் சிறந்த பாடகியாகவும் உள்ள ஸ்ருதிஹாசன் வாய்சில் சிறப்பான பல பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. படங்களில் நடிப்பதுடன், பாடுவதையும் சிறப்பாக செய்துவரும் ஸ்ருதிஹாசன், ஹலோ சகோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அக்ஷராவுடன் முரட்டு குத்து
தற்போது தன்னுடைய தங்கை அக்ஷராவுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதில் ஸ்ருதிஹாசன் புடவையிலும் அக்ஷரா மாடர்ன் ட்ரஸ்ஸிலும் ந்த குத்தாட்டத்தை போட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இணையதளத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் ஈடுபட்ட ஸ்ருதிஹாசன் பல அதிரடியான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இன்ஸ்டாகிராம் லைவ் சாட்
எப்போதும் தைரியமாக பேசக்கூடிய ஸ்ருதிஹாசன், ரசிகர்களின் ஏடாகூடமான கேள்விகளுக்கு கூலாக பதிலளித்தார். அவருடன் டேட்டிங் செய்ய விரும்புவதாக ரசிகர் ஒருவர் கேட்க, ஒரே வார்த்தையில் நோ என்று கூறி அவரை அடக்கினார். இதேபோல, மற்றொருவர், ஸ்ருதிஹாசன் வெர்ஜினா என்று கேள்வி எழுப்ப, அதற்கு முதலில் வெர்ஜின் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சரியாக தெரிந்துக் கொள்ளும்படி கூடி அவருக்கு பதிலடி கொடுத்தார்.

சாந்தனுவுடன் டேட்டிங்
தன்னுடைய காதல் சாந்தனுவுடன் டேட்டிங்கில் உள்ளார் ஸ்ருதிஹாசன். இதுகுறித்து பகிரங்கமாகவே அவர் முன்னதாக பேசியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு இருவரும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொண்டு வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், ரசிகர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு தைரியமாகவும் வெளிப்படையாகவும் பதிலளித்துள்ளார் ஸ்ருதிஹாசன். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் இவர் தான் உளவியல் சிக்கல்களில் பாதிக்கப்பட்டதாகவும் முன்னதாக தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











