Shruti haasan: அப்பா.. படிப்பை முடித்துவிட்டு வந்த கமல்ஹாசனை சந்தித்த ஸ்ருதிஹாசன்.. எமோஷனல் பதிவு!

சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருபவர். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஸ்ருதிஹாசன் நடித்திருந்த சலார் உள்ளிட்ட படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தன.. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்துடன் இணைந்து கூலி படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

இதே போல விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் ஸ்ருதி இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் ஏஐ படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள தன்னுடைய அப்பா கமல்ஹாசனை சந்தித்துள்ளார் ஸ்ருதிஹாசன். இதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

shruti haasan kamal haasan instagram

நடிகை ஸ்ருதிஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் மகளாக இருந்த போதிலும் தன்னுடைய சொந்த முயற்சியால் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தமிழில் இவருக்கு அதிகமான வாய்ப்புகள் இல்லாத நிலை காணப்பட்ட நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இனிமேல் என்ற வீடியோ பாடலை தனது சொந்த முயற்சியாக வெளியிட்டு இருந்தார். இந்த பாடலை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. பாடலுக்கு வரிகளை எழுதியிருந்தார் கமல்ஹாசன். இந்த பாடலில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசனின் கெமிஸ்ட்ரி சிறப்பாக பார்க்கப்பட்டது.

தமிழில் அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் கூலி படத்தை தொடர்ந்து விஜய்யுடன் ஜனநாயகன்படத்திலும் ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக புலி படத்தில் விஜய்யுடன் நடித்திருந்த ஸ்ருதிஹாசன் தற்போது இரண்டாவது முறையாக ஜனநாயகன்படத்தில் இணைந்துள்ளார். சில சொந்த பிரச்சினைகள் காரணமாக அதிகமாக படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்த ஸ்ருதிஹாசன், தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தன்னுடைய அப்பாவை போலவே நடிப்பு, இசையமைப்பு, பாடகி என பல்வேறு அவதாரங்களை சினிமாவில் வெளிப்படுத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன்.

shruti haasan kamal haasan instagram

அப்பாவை சந்தித்த ஸ்ருதிஹாசன்: மற்ற நாயகிகளுக்காகவும் இவர் பாடல்கள் பாடி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பத்தை கற்பதற்காக சென்றிருந்த கமல்ஹாசனை சென்னையில் சந்தித்துள்ளார் ஸ்ருதிஹாசன். இதன் புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்பா என்று ஒற்றை வார்த்தையில் காதல் எமோஜியுடன் இந்த சந்திப்பை நெகிச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்களில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதியின் பாசம் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

shruti haasan kamal haasan instagram

தக் லைஃப் படம்: 70 வயதை கடந்த நிலையிலும் தன்னுடைய கற்கும் ஆர்வத்தை விடாமல் பார்த்து வருகிறார் கமல்ஹாசன். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படம் வரும் ஜுன் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். 34 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் -கமல்ஹாசன் காம்பினேஷன் உருவாகியுள்ள நிலையில் படத்திற்கான அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அன்பறிவு இயக்கத்தில் அடுத்தப்படத்தில் இணையவுள்ளார் கமல்ஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X