கூலி படத்துல அந்த ஆசை நிறைவேறியிருக்கு.. லோகேஷ்தான் காரணம்.. ஸ்ருதிஹாசன் ஒபன்!
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ். தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் அந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்துள்ளது குறித்து உற்சாகத்தை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றுக்கு நடித்திருந்த நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது குறித்து ஸ்ருதிஹாசன் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்திடம் கற்றுக்கொள்ள அதிகமான விஷயங்கள் உள்ளதாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன்: தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் நடிகையாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் மாடலாகவும் இசையமைப்பாளராகவும் பல தளங்களில் செயல்பட்டுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இது தவிர பிரபாசுடன் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் 2 படத்திலும் இணைந்துள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாகி வரும் சென்னை ஸ்டோரிஸ் படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படங்களுடன் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் இட்ஸ் எ லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வரும் ஸ்ருதிஹாசன், இன்ஸ்டாகிராமிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அப்படி ஒரு முறை கேள்வி பதில் செஷனில் பேசிய ஸ்ருதிஹாசன் அவரது ரிலேஷன்ஷிப் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் தான் சிங்கிளாக தான் இருக்கிறேன் வேறு ஒருவருடன் மிங்கிலாக தயாராக இருக்கிறேன் என்று பதிலளித்திருந்தார்.
பிரேக் அப் செய்த ஸ்ருதிஹாசன்: ஸ்ருதிஹாசனின் இந்த பதில் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. மேலும் தான் தன்னுடைய வேலையில் மிகவும் கமிட்டடாக உள்ளதாகவும் சந்தோஷமாக வாழ்க்கையை கழித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். முன்னதாக சாந்தனு என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஸ்ருதிஹாசன் இந்த தன்னுடைய பதில் மூலம் அவருடன் பிரேக் அப் செய்ததை உறுதி செய்திருந்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ள ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்றும் அது தற்போது நிறைவேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கூட்டணி குறித்து ஸ்ருதி: லோகேஷ் படங்களில் நடிப்பது தனக்கு பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கூலி படத்தில் ரஜினியுடன் நடிப்பது தனக்கு மிகச்சிறந்த அனுபவமாக உள்ளதாகவும் அவரிடம் கற்றுக்கொள்ள அதிகமான விஷயங்கள் உள்ளதாகவும் ஸ்ருதிஹாசன் மேலும் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஸ்ருதிஹாசன் அடுத்தடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவுகளால் நிரப்பி வருகிறார். பல போட்டோஷுட் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் கொடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











