பிறந்தநாள் அதுவுமா இப்படியா செய்வீங்க... ரசிகர்களின் செயலால் கடுப்பான ஸ்ருதிஹாசன்!
சென்னை : நடிகை ஸ்ருதிஹாசன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், இணையத்தில் அவரது ரசிகர்கள் செய்த செயலால், கொஞ்சம் கடுப்பானார்.
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், அப்பாவுடன் ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அதன்பின்2009ம் ஆண்டு லக் எனும் இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ருதி, தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான 7ஆம் அறிவு படத்தில் நடித்திருந்தார்.

ஸ்ருதிஹாசன்
முதல் படத்திலேயே கமல்ஹாசனின் பெயரை காப்பாற்றும் விதமாக நடித்திருந்தார். 7ம் அறிவு படம் சூப்பர் டூபர் ஹிட்டடித்து முன்னணி நடிகை லிஸ்டில் இணைந்தார் ஸ்ருதிஹாசன்.அதன் பின் தமிழ்,தெலுங்கு, இந்தி என வரிசையாக பல மொழிப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

காதல் தோல்வி
முன்னதாக மைக்கேல் கார்சலேவை ஸ்ருதிஹாசன் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனால், படங்களில் நடிப்பதில் பெரிதாக ஈடுபாடு காட்டாமல் மன அழுத்தத்தில் இருந்தார் ஸ்ருதிஹாசன்.

மும்பையில் செட்டில்
தற்போது, டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருகிறார். காதலருக்காக மும்பையிலேயே செட்டிலான ஸ்ருதி அவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். இருவரும் ஒரே வீட்டில் படு நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வந்து குவியும். காதலனுக்காக மும்பை போன ஸ்ருதிஹாசன் எந்த காரணத்திற்காவும் சென்னை பக்கம் வருவதே இல்லை.

சிம்பிளாக கொண்டாடிய பிறந்தநாள்
இந்நிலையில்,நேற்று ஸ்ருதிஹாசன் தனது பிறந்த நாளை சிம்பிளாக கொண்டாடி உள்ளார். காலையில் படுக்கையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, நான் இந்த பிறந்த நாளில் ஆசீர்வதித்தவளாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுகிறேன். ஒவ்வொரு வருடமும் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கும்போது ஒரு விருப்பத்தை அடைய விரும்புகிறேன். மேலும், நான் இந்த பிறந்த நாளில் என்னை புத்திசாலியாக உணர்கிறேன் என எழுதி இருந்தார்.

பிறந்தநாள் அதுவுமா இப்படியா?
இதையடுத்து, ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளுக்கு இணையத்தில் ரசிகர்கள் தாறுமாறாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ஸ்ருதி சிறுவயதில் கறுப்பு பிகினியில் இருக்கும் புகைப்படம் நேற்று டிரெண்டானது. அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் பலர் பிறந்த நாள் அதுவுமா இப்படியா பண்ணுவீங்க என கேள்வி கேட்டுவருகின்றனர்.

தமிழில் படவாய்ப்பு இல்லை
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸூக்கு ஜோடியாக சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா படத்திலும், பாலகிருஷ்ணாவுடன் வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவ்விரு படங்களும் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியானது. பட வாய்ப்பு இல்லாததால், வயதான கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். தற்போது ஸ்ருதிக்கு தமிழில் எந்த ஒரு படமும் இல்லை.


Click it and Unblock the Notifications











