உடற்பயிற்சி செய்து அசத்தும் பிரபல நடிகை.. ஸ்ருதிக்கு ரொம்பத்தான் தில்லு!

ஹைதராபாத் : லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு இப்பொழுது தெலுங்கு திரைப்படங்களில் சூறாவளியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

புத்தம் புதுகாலை சீரிஸில் நடிகை சுஹாசினி இயக்கிய காபி எனிஒன் பாகத்தில் நடித்திருந்த ஸ்ருதிஹாசன் அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக பல்வேறு பாராட்டுகளைப் பெற்றார்.

தெலுங்கில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் க்ராக் திரைப்படத்தில் நடித்து வரும் ஸ்ருதி அதில் கதாநாயகன் ரவிதேஜாவுடன் சரிக்கு சமமாக பிளாங்க் உடற்பயிற்சி சேலஞ்ச் செய்து அசத்தி உள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியில் தாராளமா

இந்தியில் தாராளமா

தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து அளவான கவர்ச்சியுடன் திரைப்படங்களில் நடித்து அசத்தி வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் இந்தியில் வெளியான யாரா திரைப்படத்தில் இதுவரை கண்டிராத அளவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி நடித்து பார்க்கும் அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.

ஓடிடியில் வெளியாகும்

ஓடிடியில் வெளியாகும்

விஜய் சேதுபதி இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இருவரும் இரண்டாம் முறையாக இணைந்து பணியாற்றியுள்ள லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகி பின்னர் ஓடிடியில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை சமீபத்தில் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார்.

முன்னணி கதாநாயகர்களுடன்

முன்னணி கதாநாயகர்களுடன்

லாபம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் விஜய் சேதுபதியுடன் இணைந்து முதன் முறையாக ஜோடி போட்டுள்ள ஸ்ருதிஹாசன், இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த கையோடு தெலுங்கில் பம்பரமாய் சுற்றி இரண்டு முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து கலக்கி வருகிறார்.

மாஸ் மகாராஜா ரவிதேஜாவுடன்

மாஸ் மகாராஜா ரவிதேஜாவுடன்

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் வக்கீல் சாப், இது ஏற்கனவே தமிழில் நடிப்பில் வெளியான "நேர்கொண்ட பார்வை" திரைப்படமாகும். மேலும் மாஸ் மகாராஜா ரவிதேஜாவுடன் இணைந்து க்ராக் திரைப்படத்திலும் நடிக்க அந்த படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வந்தது

சரிக்கு சமமாக

சரிக்கு சமமாக

பாடல், நடனம், நடிப்பு என பல திறமைகளை கொண்டுள்ள ஸ்ருதிஹாசன் உடற்பயிற்சியிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் க்ராக் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நடுவில் ரவிதேஜாவுடன் சரிக்கு சமமாக பிளாங்க் உடற்பயிற்சி சேலஞ்சை அசால்டாக செய்து காட்டிய செம ஜாலியான வீடியோவை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ஸ்ருதிஹாசனின இந்த அசாத்திய முயற்சிக்கு பலரும் கைத்தட்டல்கள் உடன் லைக்குகளை அள்ளி தெளித்து வர இப்பொழுது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X