Shruti haasan: தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் இணையும் ஸ்ருதிஹாசன்?.. 'இனிமேல்' காம்போவால் வாய்ப்பு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த மாதத்திற்குள் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ள சூழலில், இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார்.

இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்ததுடன் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகமாள அளவில ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் ப்ரமோ வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சூட்டிங்கும் கடந்த இரு தினங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Actress shruti haasan seems to join with Rajinikanth -Lokesh kanagaraj s Thalaivar 171 movie

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின்ன அடுத்தடுத்த படங்கள் இளம் இயக்குநர்களுடன் உருவாக்கப்பட்டு வருகின்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மாஸ் ஹிட்டை கொடுத்தது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்து பட்டையை கிளப்பியிருந்தார். இந்தப் படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. 600 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்புத்தரப்பு அறிவித்தது. இந்த வெற்றியை ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினருடன் கொண்டாடியது. ரஜினிக்கு லாபத்தில் பங்கு கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

லால் சலாம் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் கடந்த பிப்ரவரியில் வெளியான லால் சலாம் படம் சொதப்பியது. படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருநதாலும் இது ரஜினியின் படமாகவே பார்க்கப்பட்டது. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு வெளியானது. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா உள்ளிட்ட பல நடிககர் நடித்திருந்த போதிலும் படத்தில் ரஜினியும் அவரது கேரக்டர் மட்டுமே ஆறுதல் என்று கூறும்வகையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தலைவர் 171 படம்: இந்நிலையில தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை தொடர்ந்து வரும ஜூன் மாதத்தில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் ப்ரமோ வீடியோ வரும் 22ம் தேதி வெளியாகவுள்ள சூழலில், படத்தின் நடிகர், நடிகைகளும் அன்றைய தினம் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ரஜினியுடன் நடிகை ஷோபனா 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்த கூட்டணி தளபதி படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியுடன் இணையும் ஸ்ருதிஹாசன்: இந்நிலையில் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இனிமேல் என்ற தனிப்பாடல் வெளியானது. இந்தப் பாடலில் இவர்களின் கெமிஸ்ட்ரி கவனத்தை பெற்றால், விமர்சனங்களையும் பெற்றது. முன்னதாக லியோ படத்தில் சொதப்பிய லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் முழுக்கவனத்தை செலுத்தி தலைவர் 171 படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று ரசிகர்களை விமர்சித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X