காதலால் நிரம்பும் வாழ்க்கை.. காதலருடன் நெருக்கமான வீடியோ வெளியிட்ட ஸ்ருதிஹாசன்!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், தென்னிந்திய மொழிப்படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்து வருகிறார்.

சில வருடங்கள் தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக நடிப்பதில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது மீண்டும் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி வருகிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படும் ஸ்ருதிஹாசன், அவ்வப்போது தனிப்பட்ட முறையிலும் காதலருடனும் இணைந்து எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் அவருடைய தேவர்மகன் திரைப்படத்தின்மூலம் குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் தன்னுடைய அறிமுகத்தை செய்துள்ளார். தொடர்ந்து கமலின் உன்னை போல் ஒருவன் படத்தில் பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் வெளிப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கதவை தட்டியது. அதையும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

சூர்யாவுடன் நடித்த ஏழாம் அறிவு

சூர்யாவுடன் நடித்த ஏழாம் அறிவு

சூர்யா -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் நாயகியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன் முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் ஸ்ருதிஹாசன். மற்ற தென்னிந்திய மொழிப் படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்து தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துவந்த ஸ்ருதிஹாசன், சில காலங்கள் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தாமல் இருந்தார். இந்நிலையில் நடிகர் பாலையா மற்றும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த பொங்கலையொட்டி வீரசிம்ஹா ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளன. இதனிடையே கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பாகுபலி நாயகன் பிரபாசுடன் ஜோடி சேர்ந்து சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதி.

பிரபாசுடன் சலார் படத்தில் ஸ்ருதி

பிரபாசுடன் சலார் படத்தில் ஸ்ருதி

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதனிடையே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஸ்ருதிஹாசன். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். எடக்குமடக்காக இருந்தாலும் இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களை கொடுத்து வருகின்றனர்.

காதலருடன் நெருக்கமான வீடியோ

காதலருடன் நெருக்கமான வீடியோ

இந்நிலையில் தன்னுடைய காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ருதிஹாசன் சாந்தனுவுக்கு முத்தம் கொடுக்க, பதிலுக்கு சாந்தனு ஸ்ருதிக்கு முத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது. தன்னுடைய வாழ்க்கையை காதலால் சாந்தனு நிறைத்துள்ளதாக கேப்ஷனில் ஸ்ருதி தெரிவித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் தொடர் பதிவுகளால் நிறைந்துள்ள அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 22 மில்லியனுக்கும் அதிகமானோர் தொடர்ந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த பாடல், நடனம், வொர்க்அவுட் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் இவரது குத்துச்சண்டை வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சார்ப்பட்டா 2 படத்தில் நடிக்க போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதேபோல தான் தன்னுடைய வாழ்க்கையில் பல பரிணாமங்களை சந்தித்து வருவதாகவும் சமீபத்தில் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X