Shruti haasan: காதலருடன் முத்த தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி. அதப்பத்தி மட்டும் சொல்ல மாட்டேங்கறாங்களே!

சென்னை: பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழில் ஏழாம் அறிவு படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

அடுத்ததாக பிரபாசுடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள சலார் படம் வெளியாகவுள்ளது. தொடர்ந்து தி ஐ படத்திலும் நடித்துள்ளார்.

Actress Shruti haasan shared her Diwali wishes with her lover

தன்னுடைய காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வரும் ஸ்ருதிஹாசன், அவருடன் அவ்வப்போது நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை ஸ்ருதிஹாசன்: நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 2009ம் ஆண்டில் வெளியான லக் படம் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர். தமிழில் முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக ஏழாம் அறிவு என்ற படத்தில் அறிமுகமானார். இந்த முதல் படத்திலேயே இவருக்கு நடிக்க அதிகமான ஸ்கோப் இருந்தது. தொடர்ந்து தனுஷ், விஜய், அஜித், விஜய் சேதுபதி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சாந்தனுவுடன் லிவிங் டுகெதர்: தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபாசுடன் ஸ்ருதி ஜோடி சேர்ந்துள்ள சலார் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து தி ஐ படத்திலும் நடித்துள்ளார். இதனிடையே சாந்தனு ஹசாரிகா என்ற பாடகரை காதலித்துவரும் ஸ்ருதிஹாசன், அவருடன் லிவிங் டுகெதரில் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் ஸ்ருதிஹாசன் வெளியிட்டு வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்: தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படுகிறார் ஸ்ருதிஹாசன். தன்னுடைய படங்களின் முக்கிய அப்டேட்களையும் அவ்வப்போது பகிர்ந்துவரும் ஸ்ருதி, தற்போது தீபாவளியையொட்டி தன்னுடைய காதலருடன் தான் ட்ரெடிஷனல் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் கூடிய அழகான புடவையில் ஸ்ருதிஹாசன் காட்சியளிக்கிறார். சாந்தனு வேட்டி சட்டையில் மினுமினுக்கிறார்.

முத்தத்தை பரிசளித்த ஸ்ருதிஹாசன்: இந்தப் புகைப்படங்களில் இருவரும் உற்சாகமாக மற்றும் வித்தியாசமான போஸ்களை கொடுத்துள்ளனர். சாந்தனுவிற்கு முத்தங்களை தீபாவளி பரிசாக கொடுத்துள்ளார் ஸ்ருதிஹாசன். இதனிடையே இருவரும் எப்போது திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் திருமணம் குறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் இருவரும் தங்களது வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றனர்.

பன்முகத் திறமை கொண்ட ஸ்ருதிஹாசன்: சினிமாவில் நடிகையாக மட்டுமில்லாமல் தன்னுடைய தந்தையை போலவே மல்ட்டி டேலண்ட்டுடன் வலம் வருகிறார் ஸ்ருதிஹாசன். நடிகை, பாடகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட பன்முகத் திறமையை கொண்டவராக உள்ளார். ஆனாலும் தொடர்ந்து நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளிலும் இவரை பார்க்க முடிகிறது. தன்னுடைய காதலருடன் அதிகமான பொழுதுகளை கழித்து வருவதையும் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X