ப்பா.. வெறித்தனம்.. ஆள் உயரத்திற்கு காலைத் தூக்கும் ஸ்ருதி ஹாசன்.. என்ன மேட்டருன்னு பாருங்க!

சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் ஆள் உயரத்திற்கு காலைத்தூக்கி எட்டி உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

வெறித்தனமாக கிக் பாக்ஸிங் பயிற்சி செய்யும் ஸ்ருதிஹாசன் - வைரலாகும் வீடியோ

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி இந்தி தெலுங்கு என பல மொழி படங்களிலும் கலக்கி வருகிறார்.

இருந்தப் போதும் தமிழில் இன்னும் தனக்கென ஒரு இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை.

பலருக்கு உத்வேகம்

பலருக்கு உத்வேகம்

இந்நிலையில் தான் கிக் பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன். அவரது சண்டை பயிற்சி வீடியோ பலருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.

பயிற்சி நடைமுறைகள்

பயிற்சி நடைமுறைகள்

ஸ்ருதி ஹாசனின் இந்த சண்டை வீடியோ இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றுள்ளது. லாக்டவுனின் போது, ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பயிற்சி நடைமுறைகளைப் பற்றிய புதுப்பிப்புகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

மனரீதியாக உதவியது

மனரீதியாக உதவியது

தனது ஸ்டோரிகள் மூலம், அவர் அனைவருக்கும் சில உடற்பயிற்சி இலக்குகளையும் அளித்து வருகிறார். சண்டை பயிற்சி தனக்கு தெளிவு மற்றும் பலத்தை அளித்துள்ளது என்றும் ஸ்ருதி கூறினார். சண்டை பயிற்சி குறித்தும் பேசிய அவர் இது மனரீதியாக தனக்கு உதவியது என்றும் கூறினார்.

மேக் அப் வீடியோக்கள்

மேக் அப் வீடியோக்கள்

வொர்க்அவுட் வீடியோக்களைப் பகிர்வதைத் தவிர, ஸ்ருதி ஹாசன் மேக்கப் புராடெக்ட்டுகள் குறித்தும், அவற்றை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதையும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்.. புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது முதல் மேக்-அப் நுட்பங்களை கற்பித்தல் வரை, லாக்டவுனின் போது பல்வேறு வேலைகளை செய்து வருகிறார் ஸ்ருதி ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X