உடற்பயிற்சி செய்யும் போது முதுகில் ஏறி அமர்ந்து பின்னால் தட்டிய காதலர்... வறுபடும் ஸ்ருதிஹாசன்!
சென்னை: காதலருடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு வறுபட்டு வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
Recommended Video
1992ஆம் ஆண்டு வெளியான தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
2000 ஆம் ஆண்டு வெளியான கமலின் ஹேராம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார்.

பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகம்
இந்தியில் வெளியான லக் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் ஸ்ருதி ஹாசன். இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ஸ்ருதி ஹாசன். தொடர்ந்து தெலுங்கில் அனகனகா ஓ தீருது என்ற படத்தில் நடித்தார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

தமிழில் 7ஆம் அறிவு மூலம் அறிமுகம்
தமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் ஸ்ருதி ஹாசன். இந்தப் படத்தில் சைன்ட்டிஸ்ட் மாணவியாக சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதி ஹாசன். ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சலாரில் பிரபாஸுக்கு ஜோடி
டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். தற்போது பிரபாஸுடன் சலார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. சமூக வலை தளங்களில் ஆக்டிவாக உள்ள ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

நாடகக் கலைஞருடன் காதல் - பிரிவு
நடிகை ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

வைரலான நெருக்கமான வீடியோக்கள்
இதனை தொடர்ந்து மீண்டும் காதலில் விழுந்த நடிகை ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவருடன் காதல் உறவில் உள்ளார். தாங்கள் இருவரும் காதலிப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசனே தெரிவித்திருக்கிறார். மேலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

திருமண ஐடியா இல்லை
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் குறித்து கேட்ட ரசிகரிடம், அதைவிட பெரி பிரச்சனையெல்லாம் தற்போது நாட்டில் உள்ளது. ஆகையால் தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றார். இதனால் வெக்ஸான அவரது காதலர் பிரிந்து சென்றதாக தகவல் பரவியது. அதற்கு ஏற்றார் போல் காதலருடன் இருந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்கினார் ஸ்ருதி.

காலருடன் உடற்பயிற்சி
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் தனது காதலருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இதில் நன்றாக ஓபி அடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். பின்னர் தனது காதலர் உடற்பயிற்சி செய்யும் பொஸிஷனை பார்த்து சமோசா மாதிரி இருக்கிறார் என்று கூறுகிறார்.

முதுகில் ஏறி அமர்ந்து..
தொடர்ந்து ஸ்ருதிஹாசன் முட்டி போட்டு குனிந்தப்படி உடற்பயிற்சி செய்கிறார். அப்போது ஸ்ருதி ஹாசனின் காதலர் அவரது முதுகில் ஏறி அமர்ந்து பின்னால் தட்டுகிறார். ஸ்ருதி ஹாசனின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் அடங்கவே மாட்டீங்களா என கேட்டு வருகின்றனர்.

விளாசும் நெட்டிசன்ஸ்
ஏற்கனவே மும்பை சூப்பர் மார்க்கெட்டில் தனது காதலருடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தப்படி போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருந்தார் ஸ்ருதி ஹாசன். அந்த வீடியோவே பெரும் வைரலானது. அதனை பார்த்த ரசிகர்கள் என்னதான் காதலர் என்றாலும் பப்ளிக்கில் இப்படியா என கேட்டு விளாசினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











