twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலக நாயகனின்.. சாதனை இளவரசி.. ஸ்ருதியின் அசத்தல் பயணம்!

    |

    சென்னை: உலகநாயகனின் மூத்த மகள் என்ற பெருமைக்குரியவர் ஸ்ருதி ஹாசன். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்ற பழமொழியை பல நேரங்களில் மெய்ப்பித்துள்ளார் ஸ்ருதி.

    பாட்டு, இசை, நடனம், நடிப்பு என அனைத்திலும் தனது தந்தையைப் போல சிறந்து ஜொலித்து வருகிறார் ஸ்ருதி.

    இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நேரத்தில் அவரைப்பற்றி சிலவரிகள் இதோ.

    நீங்கதான் ரியல் ஸ்டார்கள்.. பெண் போலீஸ் அதிகாரிகளை அப்படி பாராட்டிய நடிகை அனுஷ்கா!நீங்கதான் ரியல் ஸ்டார்கள்.. பெண் போலீஸ் அதிகாரிகளை அப்படி பாராட்டிய நடிகை அனுஷ்கா!

     1986ம் ஆண்டு

    1986ம் ஆண்டு

    நடிகர் கமல் ஹாசன் மற்றும் நடிகை சரிகாவுக்கு 1986ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பிறந்தார் ஸ்ருதி. சிறுவயது முதலே திரைத்துறையில் இவருக்கு அலாதி ஆர்வமாக இருந்துள்ளது. தனது அப்பாவைப்போலவே தமிழ், தெலுங்கு, இந்தி என என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

     முறைப்படி இசை

    முறைப்படி இசை

    சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த ஸ்ருதி. மும்பை கல்லுரியில் உளவியல் முடித்தார். இசை மீது இருந்த ஆர்வத்தால் அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசையை முறைப்படி பயின்றார்.

    தேவர்மகன்

    தேவர்மகன்

    தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது கலைப்பயணத்தை தொடங்கினார் ஸ்ருதி. இவர் அறிமுகமான முதல் படமே நடிகர் திலகம் சிவாஜி கணேஷனுடன் தான் என்ற பெருமை இவருக்கு உண்டு. அடுத்ததாக ஹே ராம் படத்தில் ஒரு சிறு வேடத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சுட்டி பெண் என்று பெயர் எடுத்தார்.

     அறிமுக நடிகைக்கான விருது

    அறிமுக நடிகைக்கான விருது

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 7ம் அறிவு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படித்தி சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் ஸ்ருதி. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

     காதலில் மூழ்கடித்தார்

    காதலில் மூழ்கடித்தார்

    3 திரைப்படத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ருதி நடித்தார் என்பதைவிட அழகாக யதார்த்தமான காதலை திரையில் காண்பித்து அனைவரையும் காதலில் மூழ்கடித்தார் என்று தான் சொல்ல வேண்டும். பள்ளிப்பருவ காதலில் தொடங்கி, டியூஷன் க்ளாஸ் வரை எல்லாம் நாம் பார்த்து அனுபவித்தவை என்பதால் இந்த படம் அனைவருக்கும் ஒரு ஃபேவரைட்டான படமாக மாறிது. 3 ஒரு படமாக மட்டும் இல்லாம் ஒரு நினைவாகவும் மாறி, இப்படத்தை வெற்றி பெற செய்ததோடு விருதையும் பெற்றுத்தந்தது.

     வெற்றி நாயகி

    வெற்றி நாயகி

    விஜய்,அஜித்,சூர்யா,தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலந்து கொண்டு இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டடித்ததால் வெற்றி நாயகி என பெயர் எடுத்துள்ளார் ஸ்ருதி. இந்தியில் இவர் நடித்த யாரா திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நற்பெயரை பெற்றுத்தந்து.

     இசையமைப்பு

    இசையமைப்பு

    4 வயதிலேயே தேவர் மகன் படத்தில் போற்றிப்பாடடி பெண்ணை பாடலை பாடிய பெருமைக்குரிய ஸ்ருதி. 2009ம் ஆண்டு வெளியான உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் இதுவேயாகும். மேலும் அப்படத்திற்கு துணை தயாரிப்பாளராகவும் ஸ்ருதி பணியாற்றி உள்ளார். இசை, நடனம், நடிப்பு, பாடல் என பண்முகத்தன்மை கொண்ட பர்த்டே பேபி ஸ்ருதிக்கு ஒன்ஸ் மோர் ஹாப்பி பர்த்டே சொல்லலாம்.

    English summary
    Actress Shruti Haasan special
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X