Shruti Haasan: அம்மாவாக ஆசைப்பட்டேன்.. ஆனால், ஸ்ருதி ஹாசன் சொன்ன அந்த பதில்!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், தற்போது ரஜினிகாந்துடன் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிங்கம் 3 திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு பெயரை பெற்றுத் தரவில்லை. தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதி ஹாசன் தனது திருமண வாழ்க்கை மனம் திறந்து பேசி உள்ளார்.
ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு திரைப்படத்தில் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்ருதிஹாசன். அவர் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தனுஷூடன் 3, விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம் என டாப் நடிகர்களில் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து தெலுங்கில் மூத்த நடிகர்களாக பாலைய்யா, சிரஞ்சிக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

நடிகை ஸ்ருதி ஹாசன்: என்னத்தான் கமலஹாசனின் மகளாக இருந்தாலும், அப்பா எட்டிய உயரத்தை ஸ்ருதிஹாசனால் எட்டிக்கூட பிடிக்கமுடியாமல் தவித்து வருகிறார். தமிழில் படவாய்ப்பு வராததால், தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் மும்பையிலே வாழ்ந்து வந்தார்.ஸ்ருதி அவ்வப்போது, காதலருடன் இருக்கும் போட்டோவை இணையத்தில் பகிர்ந்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த காதல் முறிந்து விட்டது. காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்த ஸ்ருதி ஹாசன், மீண்டும் நடிப்பின் மீது தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
தாயாக விருப்பம்: இந்நிலையில், அண்மையில் ஸ்ருதிஹாசன் யூடியூபர் ரன்வீர் அலாபாடி ஒரு பாட்காஸ்டில் பேசி இருந்தார். அதில், காதல் தோல்வி என்னை கடுமையாக பாதித்தது. ஆனால், அந்த காதல் தோல்விகளுக்கு தான் காரணமில்லை என்றார். தொடர்ந்து திருமணம் பற்றி பேசிய ஸ்ருதி, "திருமணம் பற்றி யோசிப்பதற்கே எனக்கு பயமாக இருக்கிறது. என்னுடைய அடையாளத்தை ஒரு சின்ன காகிதத்துடன் இணைக்க நான் விரும்பவில்லை. திருமணத்தின் கொள்கைகளை நான் மதிக்கிறேன். ஆனால், அதை சட்ட ஆவணமாக்கும்போது எனக்கு அது வேண்டாம் என்று தோன்றுகிறது. ஒரு காலத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால், திருமண உறவில், இருந்த புரிதல், இணக்கம் இல்லாத காரணத்தால் அது முடிவுக்கு வந்துவிட்டது. திருமணம் என்பது இரண்டு நபர்களை சம்மந்தப்பட்டது இல்லை, அந்த திருமண பந்தத்தில் குழந்தைகளின் எதிர்காலம், வாழ்நாள் பொறுப்பையும் பற்றியது. நான் தாயாவதை விரும்புகிறேன். ஆனால், பிறக்கும் குழந்தையை ஒரு சிங்கிள் பேரண்டாக வளர்க்க விரும்பவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











