இரண்டாவது காதலரையும் கழட்டிவிட்ட பிரபல நடிகை..இன்ஸ்டா பக்கத்தில் இருந்த போட்டோக்கள் திடீர் நீக்கம்!

சென்னை: பிரபல நடிகை தனது இரண்டாவது காதலருடன் எடுத்த போட்டோக்களை திடீரென நீக்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதி ஹாசன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானார். இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பல முகங்களை கொண்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

1992ஆம் ஆண்டு வெளியான தேவர்மகன் படத்தில் பின்னணி பாடகியாக கேரியரை தொடங்கினார் ஸ்ருதி ஹாசன். 2000 ஆம் ஆண்டில் வெளியான ஹேராம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் ஸ்ருதி ஹாசன். தொடர்ந்து பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என கலக்கி வருகிறார் ஸ்ருதி ஹாசன்

பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகம்

பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகம்

இந்தியில் வெளியான லக் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ஸ்ருதி ஹாசன். முதல் படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து தெலுங்கில் அனகனகா ஓ தீருது என்ற படத்தில் நடித்தார். இதன்மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார் ஸ்ருதி. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதி ஹாசன்.

தமிழில் 7ஆம் அறிவு மூலம் என்ட்ரி

தமிழில் 7ஆம் அறிவு மூலம் என்ட்ரி


தமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் ஸ்ருதி ஹாசன். இந்தப் படத்தில் சைன்ட்டிஸ்ட் மாணவியாக சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதி ஹாசன். ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில்..

பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில்..

டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் தமிழில் லாபம் மற்றும் பிரபாஸுடன் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. சமூக வலை தளங்களில் ஆக்டிவாக உள்ள ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

நாடகக் கலைஞருடன் காதல் - பிரிவு

நாடகக் கலைஞருடன் காதல் - பிரிவு

நடிகை ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார் நடிகை ஸ்ருதி ஹாசன். ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

வைரலான நெருக்கமான வீடியோக்கள்

வைரலான நெருக்கமான வீடியோக்கள்

இதனை தொடர்ந்து மீண்டும் காதலில் விழுந்தார் நடிகை ஸ்ருதி ஹாசன். சாந்தனு என்பவருடன் காதல் உறவில் இருந்தார் ஸ்ருதி. தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதி ஹாசனே தெரிவித்திருந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

சூப்பர் மார்க்கெட்டில் கட்டிப்பிடித்து போஸ்

சூப்பர் மார்க்கெட்டில் கட்டிப்பிடித்து போஸ்

அண்மையில் தக் லைப் என ஸ்ருதி ஹாசனின் வயிற்றில் அவரது காதலர் எழுதியிருந்த வீடியோ இணையத்தில் வெளியானது, அதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு எழுதுவதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா என சாடியிருந்தனர். மேலும் சூப்பர் மார்க்கெட்டில் இருவரும் கட்டியணைத்து படு மோசமாக போஸ் கொடுத்தனர். அதனை பார்த்த ரசிகர்கள், என்னதான் காதலர்கள் என்றாலும் இப்படியா பொது வெளியில் நடந்து கொள்வது என விளாசினர்.

எப்போது திருமணம் ? - ஸ்ருதி பதில்

எப்போது திருமணம் ? - ஸ்ருதி பதில்

சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவ்வாக உள்ள ஸ்ருதி ஹாசன், அண்மையில் ஆஸ்க் மீ எனித்திங் என்ற செஷனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் முழுக்க நேர்மையாக இருக்கிறேன் என்று நினைக்கவில்லை. மேலும் இதிலிருந்து நாம் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

இவரையும் கழட்டி விடப் போகிறீர்களா?

இவரையும் கழட்டி விடப் போகிறீர்களா?

இது 2021.. இப்போது உலகில் அதிக அழுத்தமான பல பிரச்சனைகள் உள்ளன. பல எரியும் கேள்விகள் உள்ளன. எனவே, அமைதி." என பதில் அளித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்படியானால் இந்த காதலருக்கும் பெப்பேவா? இவரையும் கழட்டி விடப் போகிறீர்களா என கேட்டு வந்தனர். மேலும் ஸ்ருதி ஹாசனின் பதிலால் அவரது காதலரான சாந்தனுவும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியானது.

 காதலருடன் இருந்த போட்டோக்கள் நீக்கம்

காதலருடன் இருந்த போட்டோக்கள் நீக்கம்

ஸ்ருதி ஹாசனுடனான காதலை முறித்துக் கொள்ளும் முடிவில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது இரண்டாவது காதலருடன் இருந்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் அவரது இரண்டாவது காதலும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறுகிறார்கள் ரசிகர்கள்.

தமிழ் நடிகர்கள் 2 பேருடன் காதல்

தமிழ் நடிகர்கள் 2 பேருடன் காதல்

நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கு படத்தில் நடிகர் சித்தார்த்துடன் நடித்தப்போது அவருடன் காதல் உறவில் இருப்பதாக கூறப்பட்டது. இருவரும் பல மாதங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் தகவல் பரவியது. அதனை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் 3 படத்தில் நடித்தார் ஸ்ருதி ஹாசன். அப்போது தனுஷுடன் அவர் நெருக்கமாக பழகியதாகவும். ஆனால் அது தனுஷின் மனைவிக்கு பிடிக்காததால் இருவருக்கும் மோதல் வெடித்ததாகவும் கூறப்பட்டது.

மனி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் ஸ்ருதி

மனி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் ஸ்ருதி

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது மனி ஹெய்ஸ்ட் என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதுகுறித்து வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X