அமெரிக்க சீரியலில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன்.. என்ன கேரக்டர்ன்னு கேளுங்க!

மும்பை: அமெரிக்க சீரியலில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

Actress shruti hassan acting in a Hollywood Serial

தமிழில் ஏழாம் அறிவு, பூஜை, சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் ஹாலிவுட் சீரியல் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அமெரிக்க தொலைக்காட்சிகளில் வெளியாகி வரும் டிரெட்ஸ்டோன் என்ற தொடரில் நடிக்க சுருதிஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த தொடர் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் ஒரு முக்கிய பகுதியான பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி இந்த சீரியல் உருவாகி வருகிறது.

ஜெரிமி ஐர்வின், பிரயன் சுமித் ஓமார் மெட்வாலி ஆகியோர் இந்த சீரியலில் நடிக்கின்றனர். இதில் ஸ்ருதி ஹாசன் ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டு மறைமுக கொலையாளியாக உலவும் கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க சீரியலில் நடித்து பேரும் புகழும் பெற்றார். இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசனும் ஹாலிவுட் சீரியலுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X