பெண்கள் அதுக்கு மட்டும்தானா?... இயக்குநர்களை குறை கூறிய ஸ்ருதி ஹாசன் !

சென்னை : உலக நாயகன் கமலின் மகள் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

சூர்யாவின் நடிப்பில் வெளியான 7-ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ருதிஹாசன். அந்த படத்தில் விஞ்ஞனா மருத்துவராகவும் வந்து முக்கிய திருப்புமுனைக்கு காரணமாக நடித்திருந்தார்.

சமீபத்தில் பேட்டி அளித்துள்ள ஸ்ருதிஹாசன், பெண்கள் திறமையானவர்கள் ஆனால் சில இயக்குநர்கள் அவர்களை அதுக்கு மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள் என்றார்.

காதலருடன் மும்பையில்

காதலருடன் மும்பையில்

பல மொழிப்படங்களில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன் டெல்லியை சேர்ந்த சாந்தனு டூடுல் கலைஞரை காதலிக்க துவங்கிய ஸ்ருதி. கடந்த 2014ம் ஆண்டு இவர்களது காதல் ஸ்டோரி ஆரம்பமானது. தற்போது இவர்கள் ஜோடிப்பறவைகளாக திரிந்து வருகின்றனர். மும்பையிலேயே இவருடன் லிவ்விங் டு கெதர் உறவு முறையில் வாழ்ந்து வருகின்றனர். இவர் அவ்வப்போது காதலரை இறுக்கி அணைத்த படியும், முத்த மழை பொழிந்த படியும் தினுசு தினுசாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சலார்

சலார்

ஸ்ருதி தமிழ் படங்களை விட தெலுங்கு மொழியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகி வரும் சலார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் வருகின்றன.

ஆக்ஷன் காட்சிகளில்

ஆக்ஷன் காட்சிகளில்

இந்த அக்ஷன் காட்சிக்காக ஸ்ருதி Matial arts கலையை ஸ்ருதி கற்றுவருகிறார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ள ஸ்ருதி, பெண்களை இயக்குநர்கள் ரொமான்ஸ் மற்றும் காதலிப்பதற்காக மட்டுமே இயக்குநர்கள் பயன்படுத்துகின்றனர். பெண்களுக்கும் ஆக்ஷன் காட்சிகளை கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால், பல இயக்குநர்கள் பெண்களுக்கு ஆக்ஷன் காட்சிகளை கொடுப்பதில்லை, ஆண்கள் உதைப்பதைவிட, பெண்கள் உதைப்பதில் வல்லுநர்கள் என்று நகைச்சுவையாக கூறினார் ஸ்ருதி ஹாசன்.

மார்க்கெட் இல்லை

மார்க்கெட் இல்லை

ஸ்ருதி பாலகிருஷ்ணாவின் 107வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதே போல சிரஞ்சீவியின் 154வது படத்திலும் சுருதிஹாசன் நடிக்கவுள்ளதாக .சோசியல் மீடியா வாயிலாக சிரஞ்சீவி அறிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து மூத்த நடிகர்களுக்கு ஸ்ருதி ஜோடி சேர்வதால் அவருக்கு மார்க்கெட் குறைந்து விட்டதாக ரசிகர்கள் கருத்துக்கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X