முதுகு தெரிய செம கவர்ச்சி.. அரைகுறை ஆடையில் வலம் வரும் ஸ்ருதி ஹாசன்.. வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்!
சென்னை : நடிகை ஸ்ருதிஹாசன் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டுவதும் , அதனை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருவதும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் சினிமா துறையில் முதன் முதலாக கால் பதிப்பவர்கள் இதனை செய்தால் பரவாயில்லை. இந்த யுக்தியை வாரிசு நடிகைகளும் செய்வது தான் மிகவும் வேதனையாக உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் படங்களில் படு கவர்ச்சியாக நடிப்பது மட்டும் இல்லாமல் எந்த ஒரு விழா நிகழ்ச்சிக்கு சென்றாலும் உச்சகட்ட கவர்ச்சியை காட்டிவருவதை சாதாரணமாகவே செய்து வருகிறார்.

பல திறமைகளை கொண்ட ஸ்ருதி, கவர்ச்சியை அதிகமாக காட்டுவது பார்ப்பவர்களை முகம் சுளிக்கத்தான் வைக்கிறது. உடைகள் அணிவது அவரவர் தனி விருப்பம் என்றாலும் கொஞ்சம் கவர்ச்சியை குறைக்கலாம் என்பதே ஸ்ருதியின் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர். பல பாடல்களை விதவிதமாக பாடி ரசிகர்களை தன் வசம் ஈர்க்கிறார். சமீபத்தில் அவர் பாடிய "தென்பாண்டி சீமையிலே" பாடல் செம ஹிட் அடித்து சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், இவர் முழு முதுகையும் காட்டி இசை கருவியை வாசிப்பது போன்ற ஒரு வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. வைரலான அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இவர் வீட்டிலும், இப்படித்தான் உடை அணிந்து இருப்பாரா? என்றும் பலர் கேலி செய்து வருகின்றனர். மேலும், ஏசியில் இருக்கும் இவரே இப்படி இருந்தால். நம்மலாம் என்ன பண்றது என்று நெட்டிசன்ஸ் கிண்டல் செய்து வருகின்றனர். இவர் கவர்ச்சி காட்டுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











