Don't Miss!
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடடா…. அந்த நடிகையையும் விட்டு வைக்காத கொரோனா… வீட்டில் தனிமையில் ஓய்வு !
மும்பை : பிரபல நடிகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3ஆம் அலை உச்சம் தொட்டது. கொரோனாவால் பல நடிகர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டனர். ஒமிக்ரான் தீவிரமானதை அடுத்து பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்ததை அடுத்து, மாநிலத்தில் அமல்படுத்தியிருந்த கொரோனா ஊரடங்கு கிட்டதட்ட முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டது. மும்பையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று நகரில் 89 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. தொற்று நோய்க்கு ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. கொரோனா இல்லாத மும்பை என்ற நிலையை நோக்கி மாநிலம் மெல்லச் சென்று கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,36,133 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 11,499 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4,29,05,844 என்று உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுபடிப்படியாக குறைந்து வரும் இந்த நேரத்தில், மும்பையில் காதலருடன் வசித்து வரும் ஸ்ருதி ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து விடுவேன் என அதில் பதிவிட்டுள்ளார். ஸ்ருதி ஹாசனின் ரசிகர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.