அச்சச்சோ.. கணவரை விவாகரத்து செய்யும் ’சுட்டபழம்’ நடிகை சுபா.. 4 ஆண்டுகளில் என்ன ஆச்சு திடீரென?
பெங்களூரு: தமிழில் மோகன் நடித்த சுட்டபழம் படத்தில் நடித்து பிரபலமானவர் கன்னட நடிகை சுபா புஞ்சா தனது காதல் கணவர் சுமந்த் பில்லவாவை விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழில் மச்சி, சுட்டபழம், திருடிய இதயத்தை, ஒரு பொண்ணு ஒரு பையன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பிரபல கன்னட நடிகை சுபா புஞ்சா கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் சுமந்த் பில்லவாவை தனது காதலர் என அறிமுகப்படுத்தினார்.

2022ம் ஆண்டு இருவரும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ திருமணம் செய்துக் கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், தற்போது இருவரும் திருமண உறவை முறித்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெருகும் விவாகரத்துக்கள்: திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று இருந்த கலாச்சாரம் எல்லாம் மாறிப்போய்விட்டது. காதலித்து திருமணம் செய்தாலும் 2 அல்லது 4 ஆண்டுகள் சேர்ந்து வாழ்வதே இப்போதெல்லாம் அரிதான விஷயமாக மாறி வருகிறது. அதிலும், கோடிக்கணக்கில் திருமணம் செய்து, அதை வீடியோ எடுத்து ஓடிடி சேனலுக்கு விற்ற ஹன்சிகா போன்றவர்களே விவாகரத்து என வந்து நிற்கும் சூழல் தான் நிலவுகிறது. அமீர்கான், சமந்தா, தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான், ரவி மோகன், ஜி.வி. பிரகாஷ் குமார், விஜய் என ஏகப்பட்ட முன்னணி பிரபலங்களின் வாழ்க்கையிலேயே இந்த விவாகரத்து பஞ்சாயத்து மிகப்பெரிய இடியை இறக்கி வருகிறது.

கணவரை பிரியும் சுபா புஞ்சா: 42 வயதாகும் நடிகை சுபா புஞ்சா கடந்த 2022ம் ஆண்டு சுமந்த பில்லவாவை திருமணம் செய்துக் கொண்டார். 2020ம் ஆண்டில் இருந்தே இருவரும் நெருங்கி பழகி காதலிக்கத் தொடங்கினர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணமும் செய்துக் கொண்டனர். ஆனால், திருமண வாழ்க்கை இவர்களுக்கும் இனிப்பாக இல்லாத நிலையில், சமீபத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை இருவரும் நாடியுள்ளனர்.
விவாகரத்து ஏன்?: என்ன காரணத்திற்காக விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர் என்பதை இருவரும் வெளியிட விரும்பவில்லை. மேலும், ஒரு மனதாக இருவரும் பிரிந்து வாழ விரும்புவதாக முடிவெடுத்து இருப்பதாகவும் தங்களுடைய பிரைவசிக்கு ரசிகர்களும் மீடியாக்களும் ஆதரவு அளிக்கும்படியும் யாரை பற்றியும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications