ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்கு ஸ்ருதி ஹாசன் உதவி
சென்னை: ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் நிவாரண உதவி அளித்துள்ளார்.
காஷ்மீர் வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது.
இதற்கு நன்கொடைகள் வழங்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதரவுக்கரம் நீட்டியுள்ள ரசிகர்கள்:
இதை ஏற்று இந்தி நடிகர்கள் சல்மான்கான், அபிஷேக் பச்சன், ஹிருத்திக் ரோஷன், குணால் கபூர், சோனாக்சி சின்ஹா உள்ளிட்டோர் நிதி உதவி அளித்துள்ளனர். இவர்களுடன் ஸ்ருதிஹாசனும் சேர்ந்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் நிதிஉதவி:
வெள்ள நிவாரண நிதியாக பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளார். மாணவர்களும், சமூக இயக்கங்களும் இதில் பங்கெடுத்து நிதிஉதவிகள் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

பிசியான நடிகை:
ஸ்ருதிஹாசன் பிசியான நடிகையாக உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கிறார். அழகும் புத்திசாலித்தனமும் ஸ்ருதிஹாசனிடம் நிறைய இருக்கிறது என்று திரையுலகத்தினர் புகழ்கிறார்கள்.

அறிவுடன் கூடிய அழகு:
இது குறித்து ஸ்ருதிஹாசன் கூறும் போது, "அழகு மட்டும் இருந்தால் போதாது அறிவும் வேண்டும். அறிவு இல்லாத அழகு பயனற்றது. அழகால் மற்றவர்களை கவரலாம். ஆனால் வாழ்க்கையில் நல்ல முடிவுகள் எடுப்பதற்கு புத்திசாலித்தனம் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











