twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயலலிதாவை பெல்காம் சிறைக்கு மாற்றினால் சுற்றுலா வளரும்: கன்னட நடிகை சர்ச்சை கருத்து

    By Veera Kumar
    |

    பெங்களூர்: ஜெயலலிதாவை மகாராஷ்டிரா எல்லையிலுள்ள பெல்காம் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றிவிட்டால், எல்லை பிரச்சினையில் கர்நாடகாவுக்கு நியாயம் கிடைப்பதுடன் அங்கு சுற்றுலாவும் வளர்ச்சியடையும் என்று கன்னட நடிகை ஸ்வேதா பண்டிட் தெரிவித்துள்ளார்.

    கர்நாடக-மராட்டிய எல்லையிலுள்ள பெல்காம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு மகாராஷ்டிரா மாநிலம் உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக, கன்னடர், மராட்டியர் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

    பெல்காமில் சட்டசபை

    பெல்காமில் சட்டசபை

    பெல்காமை கர்நாடகாவின் ஒருங்கிணைந்த அங்கமாக நிலைநாட்ட, அங்கு ஒரு சட்டசபை கட்டிடத்தை உருவாக்கியது கர்நாடக அரசு. ஆண்டுக்கு ஒருமுறை அங்கு சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது.

    நடிகை யோசனை

    நடிகை யோசனை

    இந்நிலையில் வரும் நவம்பர் 1ம்தேதி, கர்நாடக மாநிலம் உதயமான தினத்தில், பெல்காமின் பெயரை, 'பெலகாவி' என்று சுத்த கன்னட பெயராக மாற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற நிலையில், எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண கன்னட நடிகை ஸ்வேதா பண்டிட் ஒரு யோசனையை தனது பேஸ்புக் ஐடியில் தெரிவித்திருந்தார்.

    சுற்றுலா வளருமே..

    சுற்றுலா வளருமே..

    அதில் அவர் கூறியிருந்ததாவது: ஜெயா அம்மாவை பெலகாவியிலுள்ள ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம், அடுத்த நான்காண்டு காலத்திற்கு அங்கு சுற்றுலா துறை நன்கு வளர்ச்சியடைந்து கர்நாடக சுற்றுலா துறைக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

    அம்மா தொண்டர்களை அலைய விடுங்கள்

    அம்மா தொண்டர்களை அலைய விடுங்கள்

    பெங்களூர் சிறையில் ஜெயலலிதா இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் தமிழகத்தில் இருந்து ஒரேநாளில் வந்துவிட்டு திரும்பிவிடுகின்றனர். பெல்காம் சிறை என்றால் அவர்கள் வந்து செல்ல இரண்டு, மூன்று நாட்கள் தேவைப்படும். அப்போது அம்மாவின் தொண்டர்கள் செய்யும் செலவு நமது மாநிலத்து வியாபாரிகளுக்கு ஆதாயமாக மாறும்.

    மீடியாக்கள் வருவார்கள்

    மீடியாக்கள் வருவார்கள்

    நாட்டிலுள்ள பெரும்பான்மை ஊடகங்கள் பெல்காமில் குழுமி ஜெயலலிதா குறித்த செய்திகளை ஒளிபரப்புவார்கள். இதனால் பெல்காம் கர்நாடகாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது நாட்டு மக்களுக்கு அழுத்தமாக பதியும். இதன்மூலம், வருங்காலங்களில் மராட்டியர்கள் கலாட்டா செய்தாலும், தேச மக்களும், பத்திரிகைகளும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிடுவார்கள். இவ்வாறு அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    நைசாக அகற்றம்

    நைசாக அகற்றம்

    ஆனால் இரு மாநில பிரச்சினை என்பதால் இதில் தலையிடாமல் இருக்குமாறு அவரது நண்பர்கள் அறிவுறுத்தவே, தற்போது பேஸ்புக் பக்கத்தில் இருந்து அந்த கருத்துக்களை அகற்றியுள்ளார்.

    English summary
    Kannada Actress Shweta Pandit on her facebook page urged Government to shift DA Case convict Tamil Nadu former CM J Jayalithaa to Belagavi Hindalaga Jail. By shifting the convict Belgaum tourism, Hotel, Transport and other industry will also boom and Media also will shift its focus on Kunda City Belgaum
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X