கதைக்காக ஆடையில்லாமல் கூட நடிப்பேன்..நடிகையின் போல்டான பதில்.. ஆடிப்போன ரசிகர்கள்!

சென்னை: மாடல் அழகி, தொலைக்காட்சி தொகுப்பாளினி, நடிகை, ஃபெமினா மிஸ் இந்தியா என பன்முகத் திறமைகளை கொண்டவர் நடிகை ஸ்வேதா மேனன். மலையாளம், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், கதைக்கு தேவை என்றால், ஆடையில்லாமல் கூட நடிப்பேன் என்று போல்டாக பேசி உள்ளது.

நடிகை ஸ்வேதா மேனன், 1990ம் ஆண்டு மலையாளத்தில் அனஸ்வரம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, பாலிவுட்டில் இஷ்க் திரைப்படத்தில் நடித்தார். இதன் பின், அமீர் கான் மற்றும் அஜய் தேவ்கன் நடித்த "ஹம்கோ தும்சே ப்யார் ஹை" மற்றும் பந்தன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். 30க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

Actress Shwetha Menon has bravely said that she will act even without clothes

நடிகை ஸ்வேதா மேனன்: இதைத்தொடர்ந்து 2000ம் ஆண்டு மலையாள சினிமாவில் பலேரி மாணிக்யம், சால்ட் என் பெப்பர் ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதை பெற்றார். இதைத்தொடர்ந்து மலையாள ரியாலிட்டி டிவி தொடரான பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

Actress Shwetha Menon has bravely said that she will act even without clothes

இரண்டாம் திருமணம்: இவர், மாடலான பாபி போன்ஸ்லேவை காதலித்து மணந்தார். பின் அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து 2011ம் ஆண்டு, திருச்சூரைச் சேர்ந்த ஸ்ரீவல்சன் மேனனை மணந்தார். இவர்களது திருமணம் கேரள மாநிலம், வளஞ்சேரியில் உள்ள நெய்தலப்புரத் சாஸ்தா ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

Actress Shwetha Menon has bravely said that she will act even without clothes

தமிழ் படங்களில்: படங்களில் கவர்ச்சியாக வலம் வரும் இவர், கடந்த 2000ம் ஆண்டு தமிழில் வெளியான சிநேகிதியே என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சாதுமிரண்டால் படத்திலும் நான் அவனில்லை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இறுதியாக இவர், தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இணையதளம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி: மலையாளத் திரையிலகில் முக்கியமான நடிகையாக வலம் வரும் ஸ்வேதா மேனன், மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் தெரிந்து கவர்ச்சியாக நடிப்பதாக சொல்கிறார்கள் நான் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பதை தெரிந்து தான் நடிக்கிறேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பிகினி அணிந்து நடிக்க வேண்டும் என்றாலும் நான் நடிப்பேன். கதைக்கு ஆடையில்லாமல் நடிப்பது தேவையான ஒன்றாக இருந்தால், கதைக்காக ஆடையில்லாமல் கூட நடிப்பேன். ஏன் என்றால் அது சினிமா என்று அந்த பேட்டியில், நடிகை ஸ்வேதா மேனன் போல்டாக பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X