நீங்கதான் ரியல் லேடி சூப்பர் ஸ்டார்.. விஜய்க்கு பிடித்த நடிகை.. சிம்ரன் கொடுத்த ரியாக்சனை பாருங்க!
சென்னை: தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரனை மறக்க முடியுமா.. இந்திய திரையுலகில் புகழின் உச்சிக்கு சென்றாலும் தன்மை மாறாமல் பண்புடன் தனது சிரிப்பால் ரசிகர்களை நெகிழ வைத்து வருகிறார். தற்போது படும் பிஸியா சசிகுமாருடன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சிறிய நடிகர் பெரிய நடிகர் என்ற ஈகோ இல்லாமல் எல்லோருடனும் போட்டி நடிப்பால் ரசிகர்களை திகைக்க வைக்கும் சிம்ரன் இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பலரது பாராட்டுக்களால் மனம் குளிர்ந்த சிம்ரன் ரசிகர்களுக்கு தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழில் விஐபி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் சிம்ரன். அவர் நடித்த முதல் படமே ஹிட். அப்படத்தில் இடம்பெற்ற மயிலு மயிலம்மா, மின்னல் ஒரு கோடி பாடலை பார்த்தால் சிம்ரனின் இடுப்பழகு டான்ஸ் தான் ஞாபகத்திற்கு வரும். அதைத்தொடர்ந்து விஜய்யுடன் ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார். அவர் நடித்த இரண்டாவது படமும் ஹிட் ஆனது. அதைத்தொடர்ந்து நேருக்கு நேர், கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், நட்புக்காக, பிரியமானவளே, பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக என அவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் வரிசையில் இடம்பிடித்தன.

90களில் வந்த நடிகைகளில் பலர் வந்த திசை தெரியாமலே போனார்கள். ஆனால், சிம்ரன் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து அந்த கதாப்பாத்திரத்திற்காக இருக்கும் மெனக்கடல் தான் இந்த அளவிற்கு உயரத்தை அடைய முடிந்திருக்கிறது. சிம்ரன் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். இவர் நடித்த படங்களில் இடம்பெறும் பாடல்களில் அவரது நடனத்தை காணவே ரசிகர்கள் நிறைந்திருந்தனர். பல ஹீரோக்களுடன் நடனம் ஆடியிருந்தாலும் சிம்ரனை பீட் செய்ய யாராலும் முடியாது என்ற பெயரையும் எடுத்திருக்கிறார. அவர் நடிப்பில் மட்டும் அல்ல நடனத்திலும் சிறந்தவர்.
கிசுகிசு: அதேபோன்று ஒரு நடிகருடன் தொடர்ந்து இரண்டு படங்கள் நடித்தாலே காதல் என்று கிசுகிசுக்கள் வந்து விடுகிறது. ஆனால், இவர் பெயர் குறித்த செய்திகள் வராத நாட்களும் இல்லை, நாளிதழும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு கிசுகிசு வந்து விடும். குறிப்பாக கிசுகிசுக்கள் வந்தாலே அந்த நடிகை திரையுலகில் உயர்ந்து வருகிறார் என எடுத்துக்கொள்ளலாம். அப்போது சிம்ரனும் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரமும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து இருவரும் ஒரே வீட்டில் லிவிங் உறவில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
சிம்ரன் நடித்த பல படங்களுக்கு ராஜூ சுந்தரம் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிருக்கிறார். பிறகு இருவரும் சேர்ந்து தொட்டு தொட்டு சுல்தானா பாடல்களுக்கும் நடனம் ஆடியிருந்தன. இப்பாடல் இன்றைக்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் வைத்த கண்ணை எடுக்காமல் நடன அசைவுகளை ரசிகர்கள் ரசிக்கின்றனர். அந்தளவிற்கு அப்பாடலின் தாக்கம் இருக்கிறது. இருவரும் காதலிப்பதாக வந்த செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக சிம்ரனும் ராஜூ சுந்தரமும் இணைந்து ஐ லவ் யூடா என்ற படத்திலும் நடித்திருந்தனர். இப்படம் வெற்றி பெறாவிட்டாலும், அவர்களது காதல் வெற்றி பெற்றதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
கமலுடன் நெருக்கமா?: அதைத்தொடர்ந்து கமலுடன் இணைந்து பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம் படங்களில் நடித்திருந்தார் சிம்ரன். அடுத்தடுத்து கமல் படத்தில் சிம்ரன் நடித்திருந்த போது சிம்ரன் கமலை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிம்ரன் பதிலடி கொடுத்திருந்தார். கமல் தான் என்னை காதலித்தார். நான் அவரை காதலிக்கவில்லை என தெரிவித்தார். ஒரு நடிகை என்றாலே கிசுகிசுக்கள் வருவது சகஜம் தான். ஆனால், சிம்ரன் ஒரு நடிகருடன் தொடர்ந்து 3 படங்களில் நடித்தாலே அது கிசுகிசு செய்தியாக பரவியது. அவரது நடனத்திற்கு மயங்கி போன ரசிகர்கள், அவர் பேசும் தமிழையும் ரசிக்க தொடங்கினர்.
நடனம்: ஒரு நடிகை நடிப்பால் சிறந்த பெயர் பெற்றுவிடுவார்கள், பல நடிகர்களுக்கு இணையாக போட்டி போட்டு நடனம் ஆடிய ஒரே நடிகை சிம்ரன் தான். விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல் என அனைவருடனும் தனது நடனத்தால் ரசிகர்களை மட்டும் சக நடிகர்களையே வியக்க வைத்தார். யாருடன் நடிப்பது கடினம் என விஜய்யுடன் கேட்டபோது சிம்ரனை குறிப்பிட்டு பேசினார். அவருக்கு பிடித்த நடிகை சிம்ரன் என அவரே பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். விஜய்யுடன் இணைந்து சிம்ரன் ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா போன்ற படங்களில் நடித்துள்ளனர். இன்றைக்கும் ரசிகர்களுக்கு பிடித்த ஃபேவரட் படங்களில் பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் படங்கள் இடம்பெறும். இதில் இருவருக்குமா்ன கெமிஸ்ட்ரி பார்க்க அழகாக இருக்கும்.

தங்கை மரணம்: சினிமா உலகில் உச்ச நடிகையாக இருந்தாலும், தனது தங்கையை திரையுலகில் பெரிய ஸ்டார் நடிகையாக மாற்ற முடியாமல் போனது வருத்தம் தான். மோனலின் மரணம் சிம்ரனை மிகப்பெரிய வேதனையை தந்தது என தெரிவித்திருக்கிறார். என் தங்கைக்கு உதவி செய்ய முடியாதவளாக இருந்துவிட்டேன். மோனலுக்காக நேரம் ஒதுக்கியிருக்க வேண்டும் என சிம்ரன் மனம் உடைந்து பேசியிருக்கிறார்.
சினிமாவில் ரீ என்ட்ரி: நடிகைகளுக்கான மார்க்கெட் போன பிறகு அக்கா, அம்மா கதாப்பாத்திரத்தில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்கள். நல்ல வேளை அதுபோன்ற படங்களில் நடித்து ரசிகர்களை காயப்படுத்தாத நடிகை சிம்ரன். த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ரீ என்ட்ரி தந்து ரசிகர்களை கவர்ந்தார். பேட்ட படத்தில் அழகு ராணியாக ஜொலித்தார். வயசு ஆனாலும் அழகு குறையவிலலை என சிம்ரனை பார்த்து ரசிகர்கள் மயங்கி கிடந்தனர். அவர் வந்த காட்சிகள் அனைத்துமே அழகாய் இருந்ததாக நெட்டிசன்களும் தெரிவித்தனர்.

ரசிகர்களுக்கு நன்றி: சிம்ரன் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து அன்பு மழையில் நனைய வைத்து விட்டனர். இதற்கு நன்றி தெரிவி்க்கும் விதமாக சிம்ரன் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், நான் எதிர்பார்க்கவே இல்லை, அனைவரும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரம்மிக்க வைத்துவிட்டீர்கள். இது எல்லாமே கடவுள் கொடுத்த கிஃப்ட் தான். அவரால் தான் நான் உங்கள் அன்பை பெறுகிறேன். ரொம்ப ரொம்ப நன்றி என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் நீங்கதான் ரியல் லேடி சூப்பர் ஸ்டார் என கமெண்ட் போட்டுள்ளனர். குட் பேட் அக்லி ரியாக்சனையும் சேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











