கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க.. சிம்ரன் சொல்லும் சில டிப்ஸ்.. ஸ்பெஷல் வீடியோ!
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோயினான நடிகை சிம்ரன், கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, சிவகார்த்திகேயனின் சீமராஜா உள்ளிட்ட சில படங்களில் மீண்டும் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் சர்ப்ரைஸாக வந்து நடனமாடி சென்ற நடிகை சிம்ரன், நமது ஒன் இந்தியா தமிழ் நேயர்களுக்காக பிரத்யேகமாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சோஷியல் டிஸ்டன்ஸ் என சொல்லப்படும், மற்றவர்களுடன் கூடி பேசி மகிழ்வதை இந்த நேரத்தில் அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், குடும்பத்துடன் இந்த நேரத்தை செலவிட்டு, கொரோனா பாதிப்பு அண்டாமல் பாதுகாப்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை என்றும், வெளியிடங்களுக்கு தேவை ஏற்படாத நிலையில், செல்வதை கூடுமானவரை தவிர்த்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, நம் கைகளை சோப்பு அல்லது சானிடைஸர் பயன்படுத்தி, சுத்தமாக கழுவ வேண்டும், குழந்தைகளுக்கும் அதனை பழக்கப் படுத்த வேண்டும், ஹெல்தியான உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமாக இருந்தால், கொரோனா நம்மை நெருங்கவே நெருங்காது என நடிகை சிம்ரன் கூறியுள்ள விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது. நீங்களும் பார்த்து, உஷாரா இருங்க, மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு வீடியோவை ஷேர் பண்ணி உஷாரா இருக்க சொல்லுங்க!


Click it and Unblock the Notifications











