தாடியுடன் மீசையுமா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிம்ரன்!

சென்னை : நீண்ட இடைவெளிக்குப்பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள நடிகை சிம்ரன் சமீபத்தில் வெளியான பாவ கதைகள் அந்தொலஜி திரைப்படத்தில் அனைவரையும் உருக வைக்கும் மிகச்சிறந்த நடிப்பை கௌதம் மேனனுடன் இணைந்து வழங்கியிருப்பார்.

இந்தியில் மாபெரும் வெற்றி பெற்று பல விருதுகளை வென்று குவித்து அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நெகட்டிவ் ரோலில் முதன்முறையாக நடித்து வரும் சிம்ரன் அதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்த் உடன் நடிக்க உள்ளார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள சிம்ரன் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடியவாறு நீண்ட தாடியுடன் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கனவு கன்னியாக

கனவு கன்னியாக

`திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சிம்ரனின் இடத்தை நிரப்ப இன்று வரை எந்த ஒரு நடிகையாலும் முடியாத நிலையில் இன்று வரை இவரின் இடம் வெற்றிடமாகவே இருந்து வருகிறது. அந்த அளவிற்கு நடிப்பு நடனம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய சிம்ரன் 90 களில் இந்திய சினிமாவின் கனவு கன்னியாக வ++லம் வந்தார்.

இரண்டாவது இன்னிங்சை

இரண்டாவது இன்னிங்சை

இந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் என எக்கச்சக்கமான திரைப்படங்களில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள இவருக்காகவே இன்று வரை ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இப்பொழுது தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

அந்தொலஜி திரைப்படம்

அந்தொலஜி திரைப்படம்

இப்பொழுது ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாவ கதைகள் அந்தொலஜி திரைப்படத்தில் கௌதம் மேனனுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கண்கலங்க வைத்த சிம்ரன் தனது அடுத்த திரைப்படத்தில் பிரசாந்துடன் இணைந்து நடிக்க உள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது

இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதுன் திரைப்படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள நிலையில் இந்த திரைப்படம் இப்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் இந்தப் படத்தின் தமிழ் உரிமையை பெற்றிருக்க இதில் அவரது மகன் பிரசாந்த் நடித்து வருகிறார்.

மாதவனுடன் இணைந்து

மாதவனுடன் இணைந்து

இதுவரை ஆடிப்பாடி அனைவரையும் மகிழ்வித்து கதாநாயகியாக மட்டுமே நடித்து வந்த சிம்ரன் இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளார். அந்தாதுன் தமிழ் ரீமேக்கைத் தொடர்ந்து மாதவனுடன் இணைந்து நடித்துவரும் சிம்ரன் மீண்டும் படங்களில் நடித்து வருவதை பார்த்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

பெரிய வெள்ளை தாடி

பெரிய வெள்ளை தாடி

இந்த நிலையில் நேற்று கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் படுஜோராக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் இதில் சிம்ரன் கிறிஸ்துமஸ் தாத்தா போல மிகப் பெரிய வெள்ளை தாடி வைத்துக்கொண்டு, சாண்டா தொப்பியும் போட்டுக் கொண்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய் லேடிஸ் சாண்டாவாக மாறி ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இந்தப் புகைப்படம் இப்பொழுது அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X