சிம்ரனின் 50வது படம்.. யார்கூட நடிக்கிறாங்க தெரியுமா.. போஸ்டருடன் அறிவித்த படக்குழு!

சென்னை : 90களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக விஜய், அஜித், பிரஷாந்த், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சிம்ரன்.

ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார் சிம்ரன். ஆனாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ரஜினியின் பேட்ட படத்தில் வளர்ந்த பெண்ணின் தாயாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் சிம்ரன். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நடிகை சிம்ரன்

நடிகை சிம்ரன்

நடிகை சிம்ரன் 90களின் இறுதியிலும் 2000 ஆண்டுகளின் துவக்கத்திலும் முன்னணி நடிகையாக விஜய், அஜித், சூர்யா, பிரஷாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். சிம்ரன் இடுப்பிற்காகவே பேமசாக பார்க்கப்பட்டவர். ஆண் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பெண் ரசிகளையும் தன்னுடைய அழகான இடுப்பால் கட்டிப் போட்டவர் சிம்ரன். நிலவைக் கொண்டு வா என அதிரடியாகவும் நடித்த சிம்ரன்அமைதியான நடிப்பிலும் பின்னி பெடலெடுத்தார்.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பு

திருமணத்திற்கு பிறகும் நடிப்பு

இந்நிலையில் ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், திருமணம் செய்துக் கொண்டு செட்டிலானார். ஆனாலும் நடிப்பின்மீது கொண்ட ஆர்வத்தை குறைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து நடித்து வருகிறார் சிம்ரன். திருமணத்திற்கு பிறகு ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து பேட்ட படத்தில் நடித்திருந்தார். வளர்ந்த பெண்ணின் தாயாக இந்தப் படத்தில் நடித்திருந்தாலும் இளம் வயது நாயகியை போலவே காணப்பட்டார்.

சப்தம் படத்தில் சிம்ரன்

சப்தம் படத்தில் சிம்ரன்

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிறியதாக இருந்தாலும் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்ரன். இந்நிலையில் அடுத்ததாக ஈரம் படத்தின் கூட்டணி இணையவுள்ள புதிய படத்தில் சிம்ரன் இணைந்துள்ளார். நடிகர் ஆதி மற்றும் லட்சுமி மேனன் இந்தப்படத்தில் லீட் கேரக்டர்களில் இணைந்துள்ள நிலையில், சிம்ரனும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் சிம்ரனின் 50வது படமாக அமைந்துள்ள நிலையில், அவரின் கேரக்டர் குறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

லைலாவுடன் இணைந்த சிம்ரன்

லைலாவுடன் இணைந்த சிம்ரன்

இதனிடையே இந்தப் படத்தில் நடிகை லைலாவும் கமிட்டாகியுள்ளார். 22 ஆண்டுகளுக்கு பிறகு சிம்ரன் மற்றும் லைலா இருவரும் இந்தப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் படங்களை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் இந்த புதிய படத்தில் இணையவுள்ளனர். சப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படம் ஹாரர் த்ரில்லராக உருவாகி வருகிறது. முன்னதாக ஈரம் படத்தில் இணைந்த அறிவழகன் -ஆதி கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

பரபரப்பான சூட்டிங்

பரபரப்பான சூட்டிங்

சப்தம் படத்தில் ஆதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துவரும் நிலையில், அடுத்தடுத்து லைலா, சிம்ரன் ஆகியோரும் இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரம் படத்திற்கு இசையமைத்த தமன் இந்தப் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். படத்தின் அடுத்தடுத்த கட்ட சூட்டிங்குகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X