பாலிவுட்டில் மரியாதையே இல்லை.. எல்லாத்துக்கும் பேரம் பேசுவார்கள்.. சிம்ரன் அதிரடி!
சென்னை: தமிழ் சினிமாவில் எவர் கிரீன் நடிகையாக இருக்கும் நடிகை சிம்ரன் பாலிவுட் சினிமாவில் நடிக்காதது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். இந்தி படங்களில் நான் நடிக்க மறுத்துள்ளேன். ஏனெனில் அங்கிருப்பவர்கள் தென்னிந்திய நடிகர்களின் சாதனைகளை, பாரம்பரியத்தை மதிப்பதே இல்லை என கூறியுள்ளார்.
நடிகை சிம்ரன்: 90 கால கட்டத்தில் டாப் நடிகையாக வலம் வந்த நடிகை சிம்ரன், நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள்,அவள் வருவாளா, வாலி,ஜோடி என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி இருந்த சிம்ரன் தற்போது மீண்டும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் தமிழில் வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி நல்ல ரோலில் நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

மரியாதையே இல்லை: இந்நிலையில் நடிகை சிம்ரன் இந்தி படங்களில் நடிக்காதது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு பல முறை இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், நான் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ஏனென்றால், அந்த மக்களுடன் என்னால் ஒன்றிப்போக முடிவதில்லை. இந்த படங்களில் நடிப்பதற்கு முன் தெற்கில் நாங்கள் நடித்த படங்களையும், அவர்களின் பாரம்பரியத்தையும் அவர்கள் பார்ப்பது இல்லை. இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்தது. அங்கு மரியாதை என்பதே இல்லை. என் வாழ்நாளில் பாதிக்கும் மேலான காலத்தை நான் சினிமாவுக்காகக் கொடுத்திருக்கிறேன், அப்படி இருந்தும் எனக்கு மரியாதை கிடைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்.
பேரம் பேசுவார்கள்: சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்குமிடம், என்னுடன் பயணிக்கக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை, உங்களுடன் இத்தனை பேர் வரக்கூடாது என அடிப்படை வசதிகளில் கூட பேரம் பேசுவார்கள். அதுமட்டுமில்ல ஹோட்டல்கள் மற்றும் டிக்கெட்டுகளில் பேரம் பேசுகிறார்கள். இந்த விஷயங்கள் என்னை மிகவும் பாதித்தது. ஆனால், இதுவரை இதுபற்றி நான் யாரும் பேசியதில்லை. இப்படி பட்ட காரணங்களால் இங்கு வேலை செய்ய வேண்டும் என்று தோன்றுவதில்லை என சிம்ரன் பாலிவுட் சினிமா பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார். இது தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications