Simran Son Convocation: ஜோதிகா மகள், தனுஷ் மகனை அடுத்து பட்டம் வாங்கிய சிம்ரன் மகன்.. சந்தோசத்தை பாருங்க!

ஹரியானா: இந்த ஆண்டு தமிழ் திரையுலக பிரபலங்களின் குழந்தைகளுக்கு அடுத்தடுத்து பட்டமளிப்பு விழாக்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஏற்கனவே நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதியரின் மகள் தியா மும்பையில் உள்ள சர்வதேச பள்ளியில் தனது படிப்பை முடித்துவிட்டு பட்டம் வாங்கினார். அதேபோல் விவாகரத்து பெற்ற நடிகர் தனுஷ் - இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் மகன் யாத்ரா சென்னையில் உள்ள சர்வதேச பள்ளியில் தனது படிப்பை முடித்து பட்டம் வாங்கினார். இந்நிலையில் நடிகை சிம்ரனின் மகன் அதீப் பஹ்ஹா, ஹரியானாவில் உள்ள சர்வதேச பள்ளியில் தனது படிப்பை முடித்துவிட்டு பட்டம் வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் 90 மற்றும் 2000களில் கொடிகட்டிப் பறந்த நடிகை. அதன் பின்னர் திருமணம் குடும்ப வாழ்க்கை என சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தார். தற்போது தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு உள்ளார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், வெற்றியும் பெற்றது. இந்த படத்தில் இவர் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருந்தார்.

அண்மையில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் நடிகை ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல், டப்பா கதாபாத்திரங்களுக்கு பதிலாக ஆன்டி கதாபாத்திரங்கள் எவ்வளவோ பரவாயில்லை. இவரது இந்த பேச்சு நடிகை ஜோதிகாவை அட்டாக் செய்வது போல இருப்பதாக பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் சிம்ரனிடம் கேட்டபோது அப்போது தான் ஜோதிகாவைக் குறிப்பிடவில்லை என்று மறுக்காமல், நான் பேசியது போக வேண்டிய இடத்திற்கு சரியாக போய்ச் சேர்ந்துள்ளது என்று கூறினார். இதனால் இணையவாசிகள் சிம்ரனைச் சீண்டியது ஜோதிகா தான் என மீண்டும் பேச ஆரம்பித்தார்கள்.

Actress Simran Son Completed His Schooling Convocation Video Goes Trending
Photo Credit:

சிம்ரன் மகன்: சிம்ரன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மூத்த மகன் அதீப் பஹ்ஹாவின் பட்டமளிப்பு விழா புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் பார்த்து வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். டிகை சிம்ரனின் மகன் அதீப் பஹ்ஹா, ஹரியானாவில் உள்ள சர்வதேச பள்ளியில் தனது படிப்பை முடித்துவிட்டு பட்டம் வாங்கியுள்ளார். சிம்ரன் பகிர்ந்துள்ள வீடியோவில் தனது மகனின் குழந்தைப் பருவத்தில் இருந்து இப்போது வரையிலான புகைப் படங்களை கோர்த்து வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

Actress Simran Son Completed His Schooling Convocation Video Goes Trending
Photo Credit:

ஜோதிகா - தனுஷ்: ஏற்கனவே நடிகர் சூர்யா - ஜோதிகா மகள் மும்பையில் உள்ள சர்வதேச பள்ளியில் படிப்பை முடித்து பட்டம் வாங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் சூர்யா, ஜோதிகா மட்டுமல்லாமல், சூர்யாவின் பெற்றோர்கள், ஜோதிகாவின் பெற்றோர்கள், ஜோதிகாவின் ஒன்றுவிட்ட அக்கா நடிகை நக்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அதேபோல் விவாகரத்து பெற்ற நடிகர் தனுஷ் - இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் மகன் யாத்ரா சென்னையில் உள்ள சர்வதேச பள்ளியில் பட்டம் பெற்றார். இதில் இருவரும் கலந்து கொண்டார்கள். இருவரும் ஒருசேர மகனை கட்டிப்பிடித்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது. தாத்தா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார்.

More from Filmibeat

Read more about: simran yatra suriya jyotika dhanush
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X