Simran Net Worth: 47 வயதிலும் நடிப்பில் சிக்ஸர் அடிக்கும் சிம்ரன்.. இத்தனை கோடி சொத்து இருக்கா?
சென்னை: 47வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நடிகை சிம்ரனுக்கு சோஷியல் மீடியா முழுவதும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
1997ம் ஆண்டு விஜய்யின் ஒன்ஸ் மோர், பிரபுதேவாவின் விஐபி உள்ளிட்ட படங்களில் அறிமுகமானார் சிம்ரன்.
வாரணம் ஆயிரம் படத்தில் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிய சிம்ரன் மகான், ராக்கெட்ரி, கேப்டன் என கடந்த ஆண்டு வேறலெவலில் கலக்கினார். இந்நிலையில், நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு மற்றும் சொகுசு வாழ்க்கை குறித்த ஒரு சின்ன அலசலை இங்கே பார்க்கலாம் வாங்க..

47வது பிறந்தநாள்
1976ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி மும்பையில் பிறந்த சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாலா. சினிமாவுக்காக சிம்ரன் ஆக மாறிய அவர், நடித்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. வெறும் டூயட் பாடும் ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் விஜய், அஜித்துக்கு இணையான ரோல்களில் ஹீரோயினாக நடித்து மாஸ் காட்டியவர் சிம்ரன். 47வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை சிம்ரனுக்கு ஹேப்பி பர்த்டே!

50வது படம்
ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள் என பிரசாந்த் உடன் சூப்பர் ஹிட் படங்களும், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் என நடிகர் விஜய்யுடன் மெகா ஹிட் படங்களும், வாலி, அவள் வருவாளா என அஜித்துடன் அட்டகாசமான படங்களிலும் நடித்த சிம்ரன் கமல்ஹாசன் உடன் இணைந்து பம்மல் கே சம்மந்தம், பஞ்ச தந்திரம் படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருந்தார். இந்நிலையில், செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள சிம்ரன் சப்தம் எனும் 50வது படத்தில் நடித்து வருகிறார்.

அந்தகன் என்னா ஆச்சு
மேலும், கைவசம் பிரசாந்த் உடன் அந்தகன் படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா, தபு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற அந்தகன் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்கி வரும் நிலையில், தபு நடித்த வில்லி கதாபாத்திரத்தில் பிரசாந்த் உடன் நடித்து வருகிறார் சிம்ரன். அந்த படம் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 வருடத்துக்கு முன்பே திருமணம்
சினிமாவில் பீக்கில் இருந்த போதே திடீரென நடிகை சிம்ரன் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டார். பல நடிகைகள் 40 வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்யாமல் நடித்து வரும் நிலையில், சிம்ரன் 2003ம் ஆண்டு தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சிம்ரன் சம்பளம்
வாரணம் ஆயிரம் படத்தில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த சிம்ரன் ஐந்தாம் படை, த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, கோடிட்ட இடங்களை நிரப்புக, ஓடு ராஜா ஓடு, சீமராஜா, பேட்ட என கம்பேக் கொடுத்தார். கடந்த ஆண்டு சியான் விக்ரம் உடன் இணைந்து மகான், மாதவன் உடன் இணைந்து ராக்கெட்ரி, ஆர்யாவுக்கு வில்லியாக கேப்டன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக நடிகை சிம்ரன் ஒரு படத்துக்கு 50 லட்சம் முதல் 60 லட்சம் வரை வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

20 கோடி சொத்து
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா நடிகையாக வலம் வந்த நடிகை சிம்ரன் ஒட்டுமொத்தமாக 20 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமா, விளம்பர படங்கள், ரியாலிட்டி ஷோ உள்ளிட்டவற்றில் சம்பாதித்து வருகிறார் சிம்ரன். சமீபத்தில் குல்மோகர் எனும் இந்தி படத்திலும் சிம்ரன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











