Don't Miss!
- Sports
தோனி தான் எனக்கு ஃபர்ஸ்ட்.. அப்புறம் தான் நாடு.. சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் நெகிழ்ச்சி பேச்சு
- News
பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தங்க தாரகையாக மின்னும் நடிகை சிம்ரன்.. லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து வர்ணித்து புகழும் ரசிகர்கள்!
சென்னை: 90களில் இருந்து இன்று வரை பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சிம்ரன்.
இன்றும் தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள தங்க நிற புடவையில் உள்ள புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வருகின்றது.
அதிர்ச்சி.. பிரபல டைட்டானிக் பட நடிகர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.. சோகத்தில் ஹாலிவுட்

முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன்
விஐபி, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் என்று 90களில் நடிக்க தொடங்கிய நடிகை சிம்ரன், ஆரம்ப காலத்திலேயே பல ரசிகர்களை தன் வசப்படுத்தினார், ஆட்டம் பாட்டம் என்று இவர் நடித்த அனைத்து படங்களிலும் செம டான்ஸ் போட்டு பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், வாலி, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, டைம் என்று 90களில் இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

முன்னணி நடிகர்களுடன் சிம்ரன்
கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நடிகை சிம்ரன். இவர் நடித்த கன்னத்தில் முத்தமிட்டால் பம்மல் கே சம்பந்தம் போன்ற பல படங்கள் இவர் கொண்டுள்ள ரசிகர்களை அதிகரிக்க செய்தது. திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்த சிம்ரன். ஆஹா கல்யாணம் என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு துப்பறிவாளன், சீம ராஜா, பேட்ட, மகான் போன்ற பல படங்களில் நடித்து வந்தார் நடிகை சிம்ரன்.

விறுவிறுப்பான அந்தகன்
தற்போது இவர் நடித்து வெளியான ராக்கெட்ரி திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு பிறகு இந்த படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை சிம்ரன். தற்போது அந்தகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்ரன். இந்த படத்தில் பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த் போன்ற பலரும் நடித்துள்ளனர் இந்த படத்தை இயக்கியுள்ளார் தியாகராஜன். ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான அந்தாதூண் திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த அந்தகன் திரைப்படம். தமிழில் மிகப் பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தில் யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், வனிதா, மனோபாலா போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிம்ரன் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தங்க தாரகையாக மின்னும் நடிகை சிம்ரன்
சமூகவலைத்தளத்தில் மிகவும் ரேராக புகைப்படம் வெளியிடும் சிம்ரன், சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தங்க நிற புடவையில் தங்க தாரகையாக மின்னும் நடிகை சிம்ரன் ரசிகர்களின் கண்களுக்கு செம ட்ரீட் தான். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து புகழ்ந்து வருகின்றனர்.