Just In
- 37 min ago
ஒரே செக்கில் Plymouth Car! ராஜ சுலோச்சனா - ரீவைண்ட் ராஜா ஸ்பெஷல்!
- 59 min ago
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
- 1 hr ago
3 மொழிகளில் உருவாகும் 'ஹீரோயின்'.. பாலியல் நடிகை கேரக்டருக்கு ரெடியாகும் பிரபல ஹீரோயின்!
- 2 hrs ago
நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' ரீமேக்.. ஷூட்டிங்கில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!
Don't Miss!
- News
உடைந்த தடைகள்.. அதிமுகவில் சசிகலா இணைப்பு? இனிதான் ஆட்டமே ஆரம்பம்!
- Sports
அட போங்கய்யா.. மிஸ்ஸான நடராஜனின் விக்கெட்.. அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் இந்திய வீரர்கள்!
- Lifestyle
இந்திய இராணுவ தினம் குறித்து தொிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
- Automobiles
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன?
- Education
பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Finance
4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நரைத்த முடி.. சுருங்கிய கன்னம்..சிம்ரன் வெளியிட்ட மேக்கப் இல்லா புகைப்படம்.நொறுங்கிப்போன ரசிகர்கள் !
சென்னை : 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரன் இப்போது மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நொறுங்கி போயுள்ளனர்.
விஜய், அஜித், விஜயகாந்த், விக்ரம், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவை கலக்கு கலக்கு என கலக்கிய சிம்ரன் இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சிம்புவிடம் விசாரணை.. போட்டி சங்கம் தொடங்கிய டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை.. தயாரிப்பாளர்கள் முடிவு!
திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் ரஜினிமுருகன் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்திற்கு பிறகு மாதவனுடன் இணைந்து சயின்டிஃபிக் திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் சிம்ரன் ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல் பார்க்கவே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் என்ன சிம்ரன் இப்டி ஆயிடிங்க என கேட்டு வருகின்றனர்.

90s கிட்ஸ்களின் கனவுக்கன்னி
தென்னிந்தியா மட்டுமல்லாமல் ஹிந்தி பட துறையையும் கலக்கு கலக்கு என கலக்கிய நடிகை சிம்ரன் நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் ஸ்பெஷலிஸ்ட் இவருக்கு இணை இவர் மட்டுமே. 90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரனின் நடிப்பையும் தாண்டி இவரது நடனத்திற்கு இன்றுவரை பல கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இரண்டாவது இன்னிங்சை
ஹீரோக்களுக்கு இணையாக நடிப்பு, நடனம் என அனைத்திலும் பட்டையை கிளப்பிய சிம்ரன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெற்றி நாயகியாக வலம் வந்தார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் சற்று விலகி இருந்த இவர் மீண்டும் திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் ரஜினி முருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

மீண்டும் லீட் ரோலில்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் மாதவன் சிம்ரன் ஜோடி பிரபலமாக பேசப்பட்ட நிலையில் அந்த திரைப்படமும் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு பாராட்டுகளை பெற்றதோடு இப்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்து லீட் ரோலில் நடிக்கின்றனர்.

சிறப்பு தோற்றத்தில்
ராக்கெட்டரி: தி நம்பி எபெக்ட் என்ற பெயரில் உருவாகி வரும் சயின்டிஃபிக் திரைப்படத்தை மாதவன் இயக்கி நடித்து தயாரித்து வரும் நிலையில் இந்த படத்தில் மாதவனுடன் மீண்டும் ஜோடி இணைந்து நடித்து வர, ஷாருக்கான், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

என்ன சிம்ரன் இதெல்லாம்
அனைவரின் எதிர்பார்ப்பில் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக உள்ள பாவக்கதைகள் வெப் சீரிஸில் கௌதம் மேனன் உடன் இணைந்து ஜோடி போட்டு நடித்துள்ள சிம்ரன் இப்பொழுது ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல் முடி முழுவதும் நரைத்தும் கன்னமெல்லாம் சுருங்கியும் தற்போதுள்ள நேச்சுரல் லுக்கில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கனத்த இதயத்துடன் "என்ன சிம்ரன் இதெல்லாம் " என பீல் பண்ணி கூறி வந்தாலும் ஒரு சிலர் "வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் உங்கள விட்டுப் போகல" என அப்போது போலவே இப்பவும் சிம்ரனை வர்ணித்து ரசித்து வருகின்றனர் சில தீவிர ரசிகர்கள்.