38 ஆண்டுகால திரைவாழ்க்கை.. திருமணமும் இல்லை.. கிசுகிசுவும் இல்லை.. ரசிகர்களை கவர்ந்த சித்தாரா!

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹோம்லி கேரக்டர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சித்தாரா. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தனக்கு சினிமாவில் நடிப்பது பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சினிமாவில் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ள சித்தாரா கடந்த 38 ஆண்டுகளாக தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருகிறார். மலையாளத்தில் என்ட்ரி கொடுத்த சித்தாரா முதல் படத்திலேயே நெடுமுடி வேணு, மம்முட்டி, மோகன்லால் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.

sithara tamil cinema serials

நடிகை சித்தாரா: நடிகை சித்தாரா தன்னுடைய ஹோம்லியான கேரக்டர்களால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் முதல் படத்திலேயே தன்னுடைய அழகாலும், தெத்துப்பல் சிரிப்பாலும் ரசிகர்களை வசீகரித்த இவர், மலையாளத்தில் காவேரி என்ற படத்தில்தான் தன்னுடைய சினிமா கேரியரை துவங்கினார். மோகினியாட்டத்தில் சிறப்பானவரான சித்தாரா, பிரபல பள்ளியில் அதை பயின்றுக் கொண்டிருந்த நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவரது அப்பாவிடம் படக்குழுவினர் கேட்டபோது அவர் மறுத்துவிட்டதாகவும் தன்னுடைய மகள் மருத்துவராக வேண்டும் என்று கூறியதாகவும் ஆனால் அவரை படக்குழுவினர் சம்மதிக்க வைத்ததாகவும் சித்தாரா பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

வெயிட்டான கேரக்டர்: காவேரி படத்தில் சித்தாராவிற்கு வெயிட்டான கேரக்டர். இந்தப் படத்தில் வெயிட்டான கேரக்டரில் காவேரி கேரக்டரில் நெடுமுடி வேணு, மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்திருந்தார். படத்தில் இவரது கேரக்டருக்கு ஜாதகம் சரியில்லாததால் அவரை மணக்க விரும்பும் நபர்கள் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்று கூறப்படும். அதையொட்டி அடுத்தடுத்த சோக சம்பவங்கள் நடப்பதாக கதைக்களம் அமைந்திருந்தது. முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பால் அதிகமாக ஸ்கோர் செய்திருந்தார் சித்தாரா. இந்தப் படம் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது.

புது புது அர்த்தங்கள் படம்: இதையடுத்து தமிழில் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளியான புது புது அர்த்தங்கள் படத்தில் ரஹ்மானுடன் இணைந்து நடித்திருந்தார் சித்தாரா. முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பாலும் சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திருந்த சித்தாராவிற்கு அடுத்தடுத்து சிறப்பான கேரக்டர்கள் அமைந்தன. இவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்த படம் புது வசந்தம். எந்தவித சம்பந்தமும் இல்லாமல் நான்கு ஆண்களுடன் ஒரே வீட்டில் தங்கியிருக்கும் கேரக்டரில் இந்தப் படத்தில் நடித்திருந்தார் சித்தாரா. இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. சித்தாரா, முரளி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பு மற்றும் படத்தின் கதைக்களம் கொண்டாடப்பட்டது.

சினிமாவில் 38 ஆண்டுகள்: 38 ஆண்டுகளாக தொடர்ந்து சினிமாவில் நடித்துவரும் சித்தாரா, திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இதுகுறித்து பல்வேறு வதந்திகள் எழுந்தாலும் இந்த விஷயத்தில் மௌனமே சித்தாராவின் பதிலாக காணப்படுகிறது. சினிமாவில் கவர்ச்சியாக நடிக்காமல், எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் டீசண்டான நடிகையாக தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக நடித்துவரும் சித்தாரா, தனக்கு நடிப்பது மட்டுமே பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். இவர் எப்போதுமே கொண்டாட்டத்திற்குரிய நடிகையாகவே உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X