ரவுடி பேபியாக செம ஸ்டைலிஷாக மாறிய மூக்குத்தி அம்மன் ஸ்ம்ருதி .. மஜாபா மஜாபா!

சென்னை : அருண் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ஸ்ம்ருதி வெங்கட்.

மூக்குத்தி அம்மனில் ஆர் ஜே பாலாஜிக்கு தங்கையாக நடித்து பலராலும் அறியப்பட்டார்.

இப்பொழுது தனுஷ் 43 இல் முக்கிய வேடத்தில் நடித்துவரும் ஸ்ம்ருதி ரவுடி பேபியாக செம ஸ்டைலிஷ் மோடில் இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.

ஒரு சில காட்சிகளில்

ஒரு சில காட்சிகளில்

இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து பட்டையைக் கிளப்பி இருந்த தடம் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ம்ருதி வெங்கட் அதற்கு முன்பாகவே சில திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து சென்றுள்ளார்.

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்

ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்த மூக்குத்தி அம்மன் சென்ற ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜிக்கு தங்கையாக மிகவும் சாதுவான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற ஸ்ம்ருதி இப்பொழுது பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார்.

Recommended Video

DEPRESSION ல செத்தே போயிருப்பேன் | Actress Sona Chat Part-01 | Filmibeat Tamil
முக்கிய வேடத்திலும்

முக்கிய வேடத்திலும்

ஜெய் நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கும் ஸ்ம்ருதி அதே சமயம் தனுஷ் 43ல் முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். இயக்குனர் கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு, மாஃபியா என இரண்டு ஹிட்டுகளை கொடுத்த பிறகு இப்பொழுது தனுஷ் 43 இயக்கிவருகிறார்.

மஜாபா மஜாபா

மஜாபா மஜாபா

இது வரை கவர்ச்சிக்கு ஸ்டிரிக்ட்டாக நோ சொல்லி கிளாமர் காட்டி நடிக்காமல் அனைவரும் ரசிக்கின்ற குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் பிளாக் & பிளாக்கில் செம ஸ்டைலிஷாக எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை தற்பொழுது வெளியிட்டுள்ளார். இதுவரை சாதுவாக இருந்த ஸ்ம்ருதி இப்பொழுது ரவுடி பேபியாக மாறி விட்டார் மஜாபா மஜாபா என ரசிகர்கள் ஒரு புறம் வர்ணித்து வர சிலர் மாடர்ன் டிரஸ் வேணாம் வழக்கம்போல ட்ரெடிஷ்னல் லுக்குலயே வாங்க எனவும் கேட்டு உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X