என்னா டேஸ்டுயா.. ரோட்டுக் கடையில் ஜிலேபியை ரசித்து ருசிக்கும் ஸ்ம்ருதி வெங்கட் !

சென்னை : நடிகர் தனுஷ் நடித்து வரும் மாறன் திரைப்படத்தில் தங்கையாக ஸ்ம்ருதி வெங்கட் நடித்து வருகிறார்

ஜெய்க்கு ஜோடியாக குற்றமே குற்றம் படத்தில் நடித்துவரும் ஸ்ம்ருதி வெங்கட் அதைத்தொடர்ந்து மன்மத லீலை, பகையே காத்திரு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்

தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஸ்ம்ருதி வெங்கட் இப்பொழுது ஜிலேபியை ரசித்து ருசிக்கும் க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் தடம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஒரு அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஸ்ம்ருதி வெங்கட் நடித்து இருப்பார். ஆனால் இந்த படத்தில் ஸ்ம்ருதி வெங்கட் அந்த அளவுக்கு ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை இந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு பெரிதும் பரிச்சயமான ஸ்ம்ருதி வெங்கட் இப்பொழுது மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது

ஜெய்க்கு ஜோடியாக

ஜெய்க்கு ஜோடியாக

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தாலும் ஆர் ஜே பாலாஜி தங்கையாக மிகச்சிறப்பாக நடித்து பார்க்கும் அனைவரையும் சொந்த தங்கை போல நினைக்க வைத்த ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பு பலரது பாராட்டுக்களைப் பெற்றது. இந்த நிலையில் அடுத்தடுத்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகளும் இவரைத் தேடி அதிகம் வருகிறார். அந்த வகையில் இப்போது நடிகர் ஜெய்க்கு ஜோடியாக குற்றமே குற்றம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது

தனுஷுக்கு தங்கையாக

தனுஷுக்கு தங்கையாக

துருவங்கள் பதினாறு, நரகாசூரன், மாஃபியா ஆகிய படங்களை தொடர்ந்து இப்பொழுது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாறன் திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஸ்ம்ருதி வெங்கட் தனுஷுக்கு தங்கையாக நடித்துள்ளார் சமீபத்தில் அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் பாடல் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

ரோட்டுக்கடை ஜிலேபியை ரசித்து

ரோட்டுக்கடை ஜிலேபியை ரசித்து

ஹீரோயின், தங்கை வேடங்களில் என தொடர்ந்து படங்களில் மிக பிஸியாக நடித்து வரும் ஸ்ம்ருதி வெங்கட் இதுவரை நடித்த படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் இப்பொழுது டேஸ்டியான ரோட்டுக்கடை ஜிலேபியை ரசித்து ருசித்த ஜிலேபி லவ் புகைப்படங்களுக்கு இணையதளத்தில் லைக்குகளை குவிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X