இதில் எந்த "நான்" ரொம்ப அழகு சொல்லுங்களேன்.. இப்படிக் கேட்கிறார் சினேகா!
சென்னை: புன்னகை இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர் நடிகை சினேகா. பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்.
நடிகர் பிரசன்னாவின் துணைவியாகி சினிமாவிற்கு சின்ன பிரேக் தந்தவர், மீண்டும் உன் சமையலறையில் படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் மீண்டும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
இந்நிலையில், அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் முன் இனிப்பான கேள்வி ஒன்றை வைத்துள்ளார். அது என்னவென்றால்....

எது பெஸ்ட்....
தனது பேஸ்புக் பக்கத்தில் தனது நான்கு புகைப்படங்களை ஒன்றாக்கி 'இதில் எது பெஸ்ட்?' என கேள்வி எழுப்பியுள்ளார் சினேகா. கரும்புத் தின்னக் கூலியா எனக் கேட்பது போல் உள்ளது சினேகாவின் இந்தக் கேள்வி.

குடும்ப குத்துவிளக்கு...
காரணம் குடும்ப குத்துவிளக்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சினேகா. தனது படங்களில் குடும்பப் பாங்கான தோற்றத்தில் நடித்த சினேகா, எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்பட்டவர்.

சிரிப்புகளின் தொகுப்பு...
அதேபோல், அவர் வெளியிட்டுள்ள இந்த நான்கு புகைப்படங்களிலுமே அவரது சிரிப்பு வெவ்வேறு தருணங்களில் பதிவு செய்யப்பட்டது தான். இந்த நான்கு புகைப்படங்களிலுமே சினேகா சுடிதார் அணிந்து காணப்படுகிறார்.

கறுப்பு நிற உடை...
முதல் திரைப்படம் என அவர் எண்ணிட்டுள்ள புகைப்படத்தில் கறுப்பு நிற சுடிதாரில் பச்சை வண்ண துப்பாட்டாவுடம் காணப்படுகிறார் சினேகா.

மயக்கும் மஞ்சள்...
அதேபோல், இரண்டாவது புகைப்படத்தில் மஞ்சள் நிற சுடிதார் மற்றும் வெள்ளை நிற துப்பாட்டாவிலும், 3வது படத்தில் மஞ்சளுடன் இளஞ்சிவப்பு நிறம் கலந்த சுடிதாருடனும் காட்சி அளிக்கிறார்.

வெள்ளைப் புறா...
கடைசி படத்தில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற சுடிதாரில் தோன்றுகிறார் சினேகா. இந்த நான்கு புகைப்படங்களில் மூன்றில் தலைமுடியை விரித்து விட்ட ஹேர்ஸ்டைலுடனும், ஒன்றில் லூசாக பின்னப்பட்ட சடையுமாகக் காட்சியளிக்கிறார்.

72 ஆயிரம் பேர்...
மேற்கூறிய இந்த நாலு புகைப்படங்களில், எது பெஸ்ட் என தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடம் கேள்வியாகக் கேட்டுள்ளார் சினேகா. அவரது இந்தப் பதிவை சுமார் 72 ஆயிரம் பேர் ரசித்துள்ளனர். 1100க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர்.

சினேகானாலே பெஸ்ட் தான்...
கிட்டத்தட்ட 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு அனைத்து புகைப்படங்களுமே பிடித்திருப்பதாக பதிலளித்துள்ளனர்.

சேலை தான் பெஸ்ட்....
சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், சினேகா சேலையில் காட்சியளிக்கும் புகைப்படங்களையே பதிலாகப் போட்டு, சேலையில் நீங்கள் மிகவும் அழகு என அவரைப் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











