விபத்தில் சிக்கி படுத்த படுக்கையானேன்.. இனி நடக்கவே முடியாது.. கலங்கிய சினேகா!
சென்னை: மக்கள் மத்தியில் முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. இவரை ரசிகர்கள் புன்னகையரசி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஹீரோயினாகf நடித்து வந்த இவர், இப்போது துணை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து வருகிறார். அவள் விகடன் விருது விழாவில் பல விஷயத்தை சினேகா உணர்ச்சி வசப்பட்டு பேசி இருக்கிறார்.
அவள் ஐகான் விருது நடிகை சினேகாவிற்கு கருபழனியப்பன் வழங்கினார். அப்போது மேடையில் பேசிய நடிகை சினேகா, இந்த விருதை கருபழனியப்பன் அவர்களிடம் இருந்து வாங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், நான் சினிமாவுக்கு வந்த புதிதில் மூன்று வருடத்திலேயே ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கினேன். அந்த விபத்தில் கை, கால் முதுகு என அனைத்து இடங்களிலும் அடிபட்டு விட்டது. நான் எழுத்து நடக்கவே 8 மாதத்திற்கு மேல் ஆகும் என சொன்னார்கள். ஆனால், அந்த நேரத்தில் என்னிடம் பார்த்திபன் கனவு திரைப்படத்தின் கதையை கூறினார் கருபழனியப்பன். அப்போது, நான், சார் நான் எழுந்து நடக்கவே முடியாத நிலையில் இருக்கிறேன். எந்த நம்பிக்கையில் என்னிடம் கதை கூறுகிறீர்கள் என கேட்டேன். அவர் உடனே அதெல்லாம் இன்னும் ஒரு மாதத்தில் நடந்துடுவீங்க என்றார்.

விருது கிடைக்கவில்லை: இன்று அவர் கொடுத்த நம்பிக்கையால் சரியாக ஒன்றரை மாதத்தில் நான், பார்த்திபன் கனவு படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதற்கு காரணம் இவர் தான். இவர் எனக்கு கொடுத்த தைரியம் தான் என்னை அன்று எழுந்து நடக்க வைத்தது. ஆனால், அந்த படத்திற்கு எனக்கு விருது கிடைக்கவில்லை. அந்த படத்தில் நடித்த அனைவருக்கும் விருது கிடைத்தது. நமக்கு விருது கிடைக்கவில்லையே, ஒரு அங்கீகராம் கிடைக்கவில்லையே என நான் மிகவும் வருத்தப்பட்டேன். அந்த படத்திற்கு மட்டுமில்லை ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பட்டாசு என எந்த படத்திற்கும் எனக்கு விருது கிடைக்கவில்லை. அது, போகப் போக அதுவே பழகிவிட்டது.
பல வலிகள்: ஆனால் விருதை விட மக்களின் மனதில் இடம் பிடிப்பது தான் முக்கியம் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஆட்டோகிராப் இப்போது ரீ ரிலீஸ் ஆன போது கூட பலரும் எனக்கு ஃபோன் பண்ணி வாழ்த்து கூறுகிறார்கள். இப்போதும் அந்த கதாபாத்திரம் அவர்களின் மனதில் இருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பட்டாசு திரைப்படத்தில் நான் நடித்த போது கர்ப்பமாக இருந்தேன். அப்பொழுதும் எனக்கு அந்த கதாபாத்திரத்தில் தனுஷ் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் 'கோட்' படத்தில் நடிக்க எனக்கு கொடுத்தார்கள். இதற்கு எல்லாம் காரணம் ரசிகர்களாகிய நீங்களும், இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தான் அவர்களால் தான் நான் இன்று இந்த இடத்தில் இருக்கிறேன். இந்த விருதை வாங்குவதற்கு பின்னால் எவ்வளவு வலி, அவமானங்கள் பல இருக்கு, என நடிகை சினேகா உணர்ச்சிவசப்பட்டு அந்த மேடையில் பேசினார்.


Click it and Unblock the Notifications