Actress Sneha: விஜய்கிட்ட பிடிச்ச விஷயம்.. GOAT படத்திற்கு ரேட்டிங் கொடுத்த சினேகா!
சென்னை: நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்பில் நடித்துவரும் The greatest of all time படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, மோகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. அடுத்ததாக அடுத்த மாதத்தில் மாஸ்கோவிற்கு விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக பயணமாகவுள்ளனர். இந்தப் படத்தில் மகன் விஜய்க்காக டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் கடந்த சில தினங்களாக சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக யோகிபாபுவின் போர்ஷன்களும் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய். இதையடுத்து அடுத்ததாக தளபதி69 படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் GOAT படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிவரும் The greatest of all time படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, பாண்டிச்சேரி, தாய்லாந்து ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து தற்போது சென்னையிலேயே மீண்டும் சூட்டிங் நடத்தப்பட்டது. விஜய்யின் பாடல் சூட்டிங் தற்போது நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகளின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
அடுத்தக்கட்ட சூட்டிங்: விஜய் இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இதையொட்டி போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி அடுத்த மாத துவக்கத்தில் படக்குழுவினர் மாஸ்கோ செல்லவுள்ளனர். அங்கு தொடர்ந்து இரு வாரங்கள் சூட்டிங் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மகன் விஜய்யை இளமையாக காட்டுவதற்காக விஜய்க்கு டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. படத்தில் மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் அப்பா விஜய்க்கு சினேகாவும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
விஜய்யிடம் பிடித்த விஷயம் குறித்து ஸ்நேகா: இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சினேகா விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சித்தார்த் உள்ளிட்ட நடிகர்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பட்டியலிட்டுள்ளார். விஜய்யின் எளிமை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து GOAT படத்திற்கு 10க்கு 10 ரேட்டிங் கொடுத்துள்ளார் சினேகா. மேலும் அது தங்களின் படம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் அப்டேட் குறித்து கேட்டதற்கு மழுப்பலான பதில்களையே அவரிடம் பார்க்க முடிந்தது. விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்நேகா இன்டர்வியூ: விஜய்யின் அரசியல் என்ட்ரியை தொடர்ந்து தற்போது GOAT மற்றும் தளபதி 69 படங்கள் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன. இந்தப்படங்களை தொடர்ந்து தான் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளன. தற்போது ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் அளவில் சம்பளமாக பெற்று வருகிறார் விஜய். இந்நிலையில் அவரது அரசியல் என்ட்ரி மிகப்பெரிய விமர்சனங்களை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











