புன்னகை அரசியின் கலக்கல் கார்த்திகை தீபம் செலிப்ரேஷன்.. ஒளியிலே தெரிவது தேவதையா !
சென்னை : ரசிகர்களால் புன்னகை அரசி என அன்போடு அழைக்கப்படும் நடிகை சினேகா நேற்று கார்த்திகை தீபம் மிகச் சிறப்பாக கொண்டாடி அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த சினேகா சமீபத்தில் தனுஷுடன் இணைந்து பட்டாஸ் திரைப்படத்தில் பட்டையைக் கிளப்பி இருந்தார்.
தொடர்ந்துப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவரது ரசிகர் கூட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்ற நிலையில் இப்போது வெளியிட்டுள்ள கார்த்திகை தீபம் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களில் ஒளியிலே தெரிவது தேவதையா என வர்ணித்து வருகின்றனர்.

வரவேற்பு இருந்து
தமிழ் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் வெகு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சினேகா. விஜய், அஜித், கமல், பிரசாந்த் என முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து நடித்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள இவருக்கு தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

முன்னணி நடிகை
தனித்துவமான சிரிப்பினால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு "புன்னகை அரசி" என்ற பெயரைப் பெற்றதோடு பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார்.

குணச்சித்திர கதாபாத்திரம்
கதாநாயகியாக பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருந்த சினேகா திருமணத்திற்குப் பிறகு சிறிது காலம் நடிக்காமல் இருந்த நிலையில் இப்பொழுது மீண்டும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஆக்ஷனில் மாஸ் காட்டி
இந்த நிலையில் தனுஷின் மாறுபட்ட நடிப்பில் இரண்டு வேடங்களில் கலக்கி இருந்த பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து இருந்த இவர் அதில் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு ஆக்ஷனிலும் மாஸ் காட்டி இருந்தார்.

ஒளியிலே தெரிவது தேவதையா
இந்நிலையில் புதிய திரைப்படம் ஒன்றுக்காக எடையை தாறுமாறாக குறைத்திருக்கும் சினேகா நேற்று கார்த்திகை தீபத்தை வெகு சிறப்பாக கொண்டாடிய நிலையில் மஞ்சள் நிற புடவையில் மங்களகரமாக பார்க்கும் அனைவரையும் கொள்ளை கொள்ளும் அளவிற்கு சிரித்துக்கொண்டுள்ள செலிப்ரேஷன் மோட் புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதோடு ரசிகர்கள் பலரும் " ஒளியிலே தெரிவது தேவதையா" என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











