அப்படியே அந்தக்கால சாவித்திரி மாதிரி இருக்காங்களே.. விண்டேஜ் லுக்கில் சினேகா!
சென்னை: தமிழ் சினிமாவில் எவர்கிரீன் புன்னகை அரசியாக வலம் வரும் நடிகை சினேகா, நடிப்பையும் தாண்டி ஒரு வெற்றிகரமான பிசினஸ் வுமனாகவும், சோசியல் மீடியா குயினாகவும் ஜொலித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் விண்டேஜ் லுக் புகைப்படங்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது.
நடிகை சினேகா: தற்போது சினேகா பகிர்ந்துள்ள அந்த போட்டோவில் 80-களின் கிளாசிக் நடிகைகளைப் போன்ற ஒரு பிரத்யேக மேக்கப் மற்றும் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். பிக் நிற எம்பிராய்டரி புடவை, அதற்குப் பொருத்தமான பீட்டர் பேன் காலர் வைத்த பஃப் ஸ்லீவ் பிளவுஸ், கழுத்தில் நீண்ட முத்து மாலை, தலையில் அழகான ஹேர் பேண்ட் மற்றும் காதுகளில் விண்டேஜ் கம்மல் என அச்சு அசலாக அந்தக்காலத்து சினிமா நடிகை போலவே சினேகா ஜொலிக்கிறார். பூந்தோட்டத்திற்கு நடுவே நின்று அவர் பூக்களை ரசிப்பதும், தனக்கே சொந்தமான காந்த சிரிப்புடன் அவர் கொடுத்து இருக்கும் போசை ரசிகர்களைக் கண் இமைக்காமல் பார்த்து ரசித்து வருகின்றனர். நடிகை சினேகா பகிர்ந்து இருக்கும் இந்த விண்டேஜ் லுக் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா லுக் மாதிரி இருக்கு என கமெண்டு செய்து சினேகாவை வர்ணித்து வருகின்றனர்.

காதல் திருமணம்: அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து வந்த சினேகா 'அச்சமுண்டு அச்சமுண்டு' திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தபோது இருவரும் காதலித்தனர். ஆனால், காதல் வெளியே தெரியாதபடி பார்த்துக்கொண்ட இவர்கள், பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2012 ஆம் திருமணம் செய்து கொண்டனர். சினேகா, பிரச்சனா தம்பதிகளுக்கு விகான் என்ற மகனும், ஆத்யானந்தா என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகும் சினிமா, சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களின் நடுவர் எனத் தொடர்ந்து பிஸியாக இருக்கும் சினேகா, தனது குடும்ப வாழ்க்கையையும், திரை வாழ்க்கையையும் மிக அழகாக பேலன்ஸ் செய்து வருகிறார். அண்மையில் நடிகை சினேகா வெங்கட்பிரபு இயக்கிய 'கோட்' திரைப்படத்தில் முதல்வர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications