வெங்கட் பிரபு ஹீரோயின்களிடம் எப்படி தெரியுமா கதை சொல்லுவாரு?.. போட்டு உடைத்த கோவா பட நடிகை!
சென்னை: நடிகை சினேகா மற்றும் விஜய் இணைந்து நடித்த கோட் படம் கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் படம் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 455 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் விஜய்யுடன் இரண்டாவது முறையாக சினேகா கோட் படத்தில் இணைந்திருந்தார்.
இதேபோல கோவா படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்திலும் சினேகா இரண்டாவது முறையாக கோட் படத்தின் மூலம் இணைந்திருந்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு குறித்து பேசியுள்ள சினேகா அவர் பத்தடி தள்ளி நின்று கோவா படத்தின் கதையை தனக்கு கூறியதாக தெரிவித்துள்ளார்.

நடிகை சினேகா: இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை கொண்டு படங்களை இயக்கிவருகிறார். விஜய் லீட் கேரக்டரில் நடித்துள்ள கோட் படம் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த மாதத்தில் ரிலீசான நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த வசூல் 455 கோடி ரூபாய் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோட் படத்தில் விஜய் இரட்டை கெட்டப்புகளில் நடித்திருந்தார். அதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை சினேகா. இவர்களின் காம்பினேஷன் முன்னதாகவே வசீகரா படத்தில் இணைந்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக விஜய் -சினேகா காம்பினேஷன் கோட் படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
கோவா படத்தில் சினேகா: வெங்கட் பிரபு இயக்கத்திலும் சினேகா நடித்துள்ளது இது முதல் முறையல்ல. முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டை கொடுத்த கோவா படத்தில் சினேகா நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இந்த ரோல் குறித்து சமீபத்தில் அவர் தனது பேட்டியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த ரோலில் நடிப்பதற்கு தனக்கு அதிகமான ஸ்கோப் இருந்ததாகவும் குறிப்பாக தனக்கு இந்தப் படத்தின் ஒர்க்-அவுட் காட்சி மிகவும் பிடிக்கும் என்றும் சினேகா தெரிவித்துள்ளார். சிறிதாக இருந்த போதிலும் கோவா படத்தில் நடிப்பதற்கு தனக்கு மிகவும் விருப்பமாக இருந்ததாகவும் சினேகா கூறியுள்ளார்.
தள்ளி நின்று கதை சொன்ன இயக்குநர்: முன்னதாக இந்த படத்தின் கதையை தனக்கு கூற வந்த இயக்குநர் வெங்கட் பிரபு, பத்தடி தள்ளி நின்றே தனக்கு இந்த கதையை கூறியதாகவும் நெகட்டிவ் கேரக்டரை தனக்கு எடுத்து வந்ததால் அவர் பயத்துடன் இந்த கேரக்டரை தனக்கு தள்ளி நின்று விவரித்ததாகவும் சினேகா மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த கேரக்டர் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கேரக்டர் புதிதாக இருந்ததாகவும் தனக்கு நடிப்பதற்கு புதிதாக இருந்ததாகவும் சினேகா கூறியுள்ளார்.
அப்பா செல்லம்: இதனிடையே சினேகாவின் அம்மா பத்மாவதி தன்னுடைய மகளின் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார். சினேகா தன்னுடைய அம்மா பத்மாவதியை பத்து என்றுதான் கூப்பிடுவார் என்பதையும் அவர் கூறியுள்ளார். சினேகாவிற்கு தேவையான அனைத்தையும் தான்தான் செய்வேன் என்றும் ஆனால் அவர் அப்பா செல்லம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் சினிமாவில் என்ட்ரி ஆனது தன்னுடைய அப்பாவிற்கு பிடிக்கவில்லை என்ற போதிலும் அவர் நடிக்க அனுமதித்ததால் மட்டுமே தான் நல்ல நடிகையாக ரசிகர்களை கவர்ந்து தற்போதுள்ள வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் சினேகா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











