Sneha: சினேகா எந்த நடிகரோட ரசிகை தெரியுமா?.. அவரை யாருக்குத்தான் பிடிக்காது?

சென்னை: நடிகை சினேகா கமல்ஹாசன், விஜய் உள்ளிட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளவர். தொடர்ந்து திருமணமாகி குழந்தைகள் உள்ள போதிலும் தன்னுடைய நடிப்பை தொடந்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தனிப்பட்ட முறையில் பிஸ்னஸ் உமனாகவும் மாஸ் காட்டி வருகிறார்.

சமீத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து சினேகா நடித்திருந்த கோட் படம் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தன்னுடைய குடும்பத்தினர் குறித்து அடுத்தடுத்த சுவாரசியங்களை பகிர்ந்துள்ளார். மேலும் தனக்கு பிடித்தமான நடிகர் குறித்தும் சினேகா வெளிப்படையாக பேசியுள்ளார்.

ajithkumar sneha tamil cinema

நடிகை சினேகா: நடிகை சினேகா தமிழில் விஜய். கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சினேகா. இது மட்டுமில்லாமல் புடவை பிசினஸும் செய்து வருகிறார். அடுத்தடுத்து தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் சினேகா, சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து கோட் படத்தில் நடித்திருந்தார்.

சினேகா இன்டர்வியூ: முன்னதாக விஜய்யுடன் இணைந்து வசீகரா படத்தில் நடித்திருந்த சினேகா, இரண்டாவது முறையாக கோட் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலம் வெங்கட் பிரபு இயக்கத்திலும் இரண்டாவது முறையாக இணைந்திருந்தார். கோட் படம் சினேகாவிற்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர் விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் தன்னுடைய பெற்றோர், தன்னுடைய கேரியரை சிறப்பாக்கிக் கொள்ள எப்படி பலமாக இருந்தனர் என்பது குறித்தும் தன்னுடைய குடும்பம், கணவர் என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சினேகாவிற்கு பிடித்த நடிகர்: இந்நிலையில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சினேகாவிற்கு பிடித்த நடிகர் யார் என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சிறிதும் தயங்காமல் நடிகர் அஜித்தைதான் தனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய அக்காவிற்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்கும் என்றும் அவரது போஸ்டர்களை தன்னுடைய அறையில் வைத்துக் கொள்வார் என்றும் கூறியுள்ள சினேகா, தனக்கு அஜித்தை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சினேகா பிசி: நடிகை சினேகா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வர காரணம் அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருவதுதான். இந்த வயதிலும் ஜிம்மில் சிறப்பாக வொர்க் அவுட் செய்து வருகிறார் சினேகா. நடிப்பு, பிசினஸ் என பம்பரமாக சுழன்று வருகிறார். தன்னுடைய குழந்தைகளையும் கணவரையும் சரியாக பராமரித்து வருகிறார். இதற்கெல்லாம் இவருக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கிறது என்று தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X