வீட்டில் ஆமையை வளர்க்கும் நடிகை ..வீடியோ வெளியிட்டு ஆச்சர்யம்!
மும்பை : தனது வீட்டில் செல்ல பிராணியாக ஆமையை வளர்த்து கொண்டு இருக்கும் சினேகா உல்லால். தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு உள்ளார் .
இந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் நடிகைகள் தனது செல்ல பிராணிகளுடன் விளையாடுவதையே முக்கிய பொழுது போக்காக செய்து வருகின்றனர் .
நம் நாட்டில் தான் ஆமை வளர்த்தால் வீட்டிற்கு ஆகாது என்ற மூடநம்பிக்கை உள்ளது . ஆனால் வெளிநாடுகளில் பிறந்தவர்கள், ஆமையை தனது செல்லக்குட்டியாக வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

முன்னணி நடிகர்கள்
ஹிந்தி,தெலுங்கு,கன்னடா ,பெங்காலி போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகர்களோடு நடித்தவர் தான் சினேகா உல்லால்."லக்கி நோ டைம் ஃபார் லவ்" என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான இவர் சல்மான் கானுடன் இணைத்து நடித்தார் ."உல்லாசம்கா உட்சாஹம்கா" என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார் .

முகச்சாயல்
இவருக்கென்று தனித்துவமான நடிப்பு திறன் இருந்தாலும் பலரும் இவரை உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முக சாயலில் இருப்பதாக சொல்வார்கள், ஐஸ்வர்யா ராய் முக சாயல் இருந்தாலும் தனக்கு அது எந்த வகையிலும் நடிப்பில் பயன்படவில்லை என்று அவர் கூறியதாக பல சர்ச்சை கருத்துக்கள் வந்தது. ஆனால் சட்டென்று அவரது புகைப்படத்தை பார்க்கும் போது நமக்கும் அதே தான் தோன்றுகிறது.

செல்ல பிராணி
பெரும்பாலும் அனைத்து நடிகைகளும் தனது வீட்டில் செல்ல பிராணியாக நாய் குட்டியையும் , பூனைக்குட்டியையும் வளர்ந்து கொண்டு இருக்கின்றனர் . அதனுடன் விளையாடுவதையும் , வீடியோ எடுப்பதையும் தனது பொழுது போக்காகவே செய்து வருகின்றனர். அந்த வகையில் சினேகாவும் தனக்கு பிடித்த செல்ல குட்டியுடன் நேரத்தை கழிக்கிறார் .

ஆமைக்குட்டி
நடுவீட்டில் ஏதோ ஒன்று நகர்வதை போல் தெரிகிறது , அருகே சென்று பார்த்தால் அது ஆமை குட்டி ,அதன் பெயர் சார்லியாம் , சரி ஒன்று தான் என்று நினைத்து கொண்டு இருக்கும் நேரத்தில் கொஞ்சம் அருகில் வேற ஏதோ ஒன்று வருகிறது , அது என்னவென்று பார்த்தால் அடப்பாவிங்களா அதுவும் ஆமை தான் அதன் பெயர் சிலா. ஆமைகளைக்கூட ஜோடியாக வளர்க்கிறார் சினேகா.

பீர் பாட்டில்
தனது வீட்டில் ஆமை மட்டும் இல்லாமல் பூனை குட்டியையும் வளர்க்கிறார் சினேகா . அதில் என்ன ஆச்சர்யம் என்று நினைத்தால் பூனை குட்டி பீர் பாட்டிலுடன் உட்கார்ந்து இருக்கிறது . நாய் , பூனை , ஆமை என்று வீட்டில் ஒரு குட்டி ஜூவையே வைத்து இருக்கிறார் சினேகா.

வெயிலுக்கு இதமா பீர்
சமீபத்தில் சினேகா வெளியிட்ட புகைப்படத்தில் வெயிலுக்கு இதமாக ஃப்ரிட்ஜை துறந்து வைத்து விட்டு , அதில் சாய்ந்தபடி பீரை குடிக்கிறார். அதனை பார்த்த அவரது ரசிகர்களும் பல பல கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர். நீண்ட நாள் திரையில் வராத சினேகாவை பார்த்த ரசிகர்களும் உச்சகத்தில் இருக்கின்றனர். அனைத்து நடிகர், நடிகைகளும் செல்ல பிராணியுடன் விளையாடுவதை பார்த்த நமக்கு இவர் ஆமை குட்டியுடன் விளையாடி வீடியோவை வெளியிட்டது பார்ப்பவர்களை கவர்ந்து உள்ளது . பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வருகிறார் சினேகா. அடுத்து எப்போ திரையில் வருவீர்கள் என்று அவரது ரசிகர்கள் கேட்ட வண்ணம் உள்ளனர் .


Click it and Unblock the Notifications











