கல்யாணமாகி 3 மாசம்தானே ஆச்சு.. நாக சைத்தன்யா எங்கே.. தனியாக கும்பகோணத்தில் சோபிதா என்ன செய்கிறார்!

சென்னை: சினிமா துறையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி என்று கொண்டாடப்பட்ட நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.அதன் பின் நாகசைத்தன்யா சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது சோபிதா துலிபாலா கும்பகோணத்திற்கு தனியாக டூர் சென்றுள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நடிகை சமந்தா மற்றும் நாகசைத்தன்யா, 2010ஆம் ஆண்டு வெளியான 'யே மாயா சேசாவே' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். முதல் படத்திலேயே இவர்களின் கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், 2017ஆம் ஆண்டு கோவாவில் இவர்களின் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடந்தது. இந்த திருமணத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

sobhita Dhulipala Naga Chaitanya photo

நாக சைத்தன்யா: இதைத்தொடர்ந்து, 2020ம் ஆண்டே சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்து விட்டதாகவும், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாக சைதன்யாவின் பெயர் மற்றும் புகைப்படங்களை நீக்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில், 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர். நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஒரு வருடத்திற்குள் சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, நடிகை சமந்தா ஓய்வு எடுத்து வருகிறார். சமந்தா கடைசியாக ராஜ் & டிகேவின் ஆக்‌ஷன் ஓடிடி தொடரான 'சிட்டாடல்: ஹனி பன்னி'யில் வருண் தவானுடன் நடித்தார்.

sobhita Dhulipala Naga Chaitanya photo

திருமணம்: நாக சைதன்யா மற்றும் சமந்தா பிரிவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில், இவர்கள் இருவருக்குள் அப்படி என்ன மனக்கசப்பு ஏற்பட்டது என்று தெரியவில்லை. அதேபோல, விவாகரத்தின் போது சமந்தா நாகசைத்தன்யாவிடம் இருந்து எந்தவிதமான ஜீவனாம்சத்தையும் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு நாக சைத்தன்யா தனியே வாழ்ந்து வந்த நிலையில், நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நடைபெற்றது. திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் கலந்துகொண்டனர். இது தொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

sobhita Dhulipala Naga Chaitanya photo

நாக சைதன்யா எங்கே: திருமணத்துக்குப் பின் நாக சைதன்யா நடித்த 'தண்டேல்' படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியது. இந்த படத்தில் நாக சைதன்யாவின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் இதை தொடர்ந்து, அவர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது சோபிதா கும்பகோணத்திற்கு தனியாக டூர் சென்றுள்ளார். அந்த போட்டோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த இணைவாசிகள் திருமணமாகி மூனு மாதம் தானே ஆச்சு அதுக்குள்ள ஏன் தனி டூர் என்றும், நாகசைத்தன்யாக எங்கே என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர். நடிகை சோபிதா துலிபாலா,மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையின் தோழி வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FAQs
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சோபிதா துலிபாலாவின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?

சோபிதா துலிபாலாவின் கதாபாத்திரத்தின் பெயர் வானதி

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X