படு கவர்ச்சி போஸ்.. பெரிய இடத்து மருமகளா இப்படி? விளாசும் இணையவாசிகள்!
சென்னை: தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள நடிகை சோபிதா துலிபாலா, நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் தனது கலைப்பயணத்தை அதே உற்சாகத்துடன் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக அவர் அளித்துள்ள கவர்ச்சியான போட்டோஷூட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் 'வானதி' கதாபாத்திரத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான சோபிதா, தனது அமைதியான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டுவம்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நடிகை சோபிதா துலிபாலா: நடிகர் நாக சைதன்யா, முன்னாள் மனைவி சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு, சோபிதா துலிபாலிவை காதலித்து வருவதாகவும், இருவரும் பல இடத்தில் டேட்டிங் செல்வதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து, இருவரும் 2024ஆம் ஆண்டு குடும்பத்தினரின் முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் திரையுலகில் பெரும் கவனத்தை பெற்றது.

கவர்ச்சி போட்டோஸ்: திருமணத்திற்கு பிறகும் தனது தொழிலில் கவனம் செலுத்தி வரும் சோபிதா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து, அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் அப்டேட்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான பத்திரிக்கை அட்டைப்பட போட்டோவில் அவர் மிகவும் கவர்ச்சியான லுக்கில் தோன்றியுள்ளார். குறிப்பாக, அந்த புகைப்படத்தில் bold ஆன ஸ்டைலில் அவர் அளித்த போஸ் ரசிகர்களிடையே பரவலாக பேசப்படுகிறது.
பெரிய இடத்து மருமகளா இப்படி?: இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், சிலர் அவரது ஸ்டைல் மற்றும் கான்ஃபிடன்ஸை பாராட்டி வருகிறார்கள். அதே சமயம், "திருமணத்திற்கு பிறகும் இப்படியான கவர்ச்சி தேவையா?" என்றும், "பெரிய குடும்பத்தின் மருமகள் என்பதை மறந்துவிட்டாரா?" என்றும் விமர்சனங்களையும் சிலர் முன்வைத்து வருகின்றனர். இதனால், சோபிதாவின் இந்த போட்டோஷூட் சமூக வலைதளங்களில் விவாதத்தையும் கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











