கவர்ச்சி நடிகைனா? பிச்சை எடுத்துக்கூட சாப்பிடுவேன்.. வடிவேலு கூட நடிக்க மாட்டேன்.. நடிகை ஓபன் டாக்!
சென்னை: பிரபல நடிகை சோனா எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் 'ஸ்மோக்'. ஷார்ட்பிளிக்ஸ் ஓ.டி.டி. நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் நிறுவனம் மூலம் அவரே இந்த சீரிஸை தயாரித்தும் உள்ளார். 8 எபிசோடு கொண்ட இந்த வெப் தொடர், 2010-ம் ஆண்டில் இருந்து 2015- வரை சோனாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இதுகுறித்து யூடியுப் சேனலுக்கு பேட்டி அளித்த சோனா, தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயத்தை கூறியுள்ளார்.
அதில், என் வாழ்க்கையில பல ஏமாற்றங்களை சந்தித்து இருக்கேன் என் அப்பா மட்டும் சரியாக இருந்திருந்தால் இந்த ஏமாற்றங்களை நான் சந்தித்திருக்க மாட்டேன். இப்படி பல ஏமாற்றங்கள் என்ன சுத்தி நடந்ததால யாராவது ஒருவர் எனக்காக இருந்தாலும் அவங்கள நான் நம்புறது இல்ல, சோனியா நீ கவலைப்படாதே நான் இருக்கேன்னு சொன்னாலும், அவங்களக்கூட சந்தேகமாகத்தான் பார்பபேன். ஏன் என்றால் நான் ஏமாந்தது ஒருத்தர் இரண்டு பேர் இல்ல, பல பேரிடம் ஏமாந்து இருக்கிறேன். என் தலையில் மட்டும் இளிச்ச வாய் என்று எழுதி இருக்கிறதா என்று தெரியவில்லை.

நடிகை சோனா: இதுபோல பல ஏமாற்றங்களில் இருந்து என்னை திசை திருப்பியது நடிப்பு மட்டும்தான். அதனால நான் படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்துக்கொண்டு இருந்தேன். ஆனாலும், எப்போதுமே என்னை கவர்ச்சி நடிகையாக பார்த்ததால், தொடர்ந்து நடிக்க எனக்கு விருப்பமில்லை. இதனால், வந்த வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அதன்பின் தான் என்னுடைய பயோபிக்கை எடுக்க ஆரம்பித்தேன், என்னோட வாழ்க்கையில நடந்த எல்லா விஷயங்களையும் அதில், சொல்ல வேண்டும் என்று ஆசை பட்டேன், கவர்ச்சி நடிகை இறந்துவிட்டால் தான் பயோபிக் வெளியாகும். சில்க் ஸ்மிதா இறந்த போது அவரின் பயோபிக் என்று ஆளுக்கு ஒரு கதை சொன்னார்கள். ஆனால்,சில்க்கின் உண்மையான கதை எது என்றே யாருக்கும் தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் நான் இறந்த பின் என்னை பற்றி படம் எடுக்கிறேன் என்று ஆளுக்கு ஒரு கதை சொல்லுவார்கள். இதனால் என் கதையை நானே சொல்லிவிட்டேன்.

அம்மா இறந்த போது: நான் ஒரு கிளாமர் நடிகையாக இருந்ததால் பல விஷயங்களை பல சங்கடங்களை கடந்து வந்திருக்கிறேன். அம்மா இறந்து விட்டார்கள் அவர்களை அடக்கம் செய்துவிட்டு வெளியில் வந்த போது, ஒரு ரசிகர் என்னிடம் செல்ஃபி எடுக்க வந்தார். அப்போது, நான், நான் அம்மா இறந்து விட்டார்கள். இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டேன். ஆனால், அவர் உலகத்தில் இல்லாததா நடந்து இருக்கு, ஒரு செல்ஃபி கொடுத்தா என்ன என்று பேசினார். அதை கேட்டு மிகவும் கஷ்டமாக இருந்தது, நான் ஒரு கவர்ச்சி நடிகை என்பதால் தான் அப்படி பேசினார். ஆனால், இப்போது அந்த நிலை மாறி இருக்கிறது. என்னை பல பேர் மதிக்கிறார்கள் அதற்காகத்தான் நான் கவர்ச்சியாக நடிப்பதை விட்டு விட்டேன்.

பிச்சை எடுத்து சாப்பிடுவேன்: வடிவேலுவுடன் குசேலன் படத்தில் நடித்தேன், அவரை பற்றி பலர் பல விஷயத்தை பேசிவிட்டார்கள் நான் புதுசாக சொல்வதற்கு எதுவும் இல்லை. அந்த படத்திற்கு பிறகு அவருடன் சேர்ந்து நடிக்க 16 படங்கள் வந்தன. ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். கோடி ரூபாய் கொடுத்தா கூட வேண்டாம், பிச்சை எடுத்துக்கூட சாப்பிடுவேன் அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் என சோனா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











