நடிகைகளுடன் அதை ஸ்டாப் பண்ணிட்டேன்.. வெச்சிக்குறேனு சொன்னாங்க.. சோனா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: தமிழ் சினிமாவில் கிளாமர் வேடங்களில் நடித்தவர் சோனா. கவர்ச்சி நடிகையாக அறியப்படும் சோனா இன்றுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்தச் சூழலில் தனது திரையுலக அனுபவம் குறித்தும்; தன்னுடைய பெர்சனல் வாழ்க்கை குறித்தும் ஃபில்மிபீட் தமிழுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி கொடுத்தார். அதை இதில் பார்க்கலாம்.
பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் சோனா. அந்தப் படத்தில் குணசித்திர வேடங்களில் நடித்த அவர் அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் திடீரென அவர் கிளாமர் ரூட் பக்கம் சென்றார். அதன்படி வரிசையாக அவர் நடித்த படங்களில் கிளாமர் வேடங்களே கிடைத்தன. பத்து பத்து, குசேலன், மிருகம் என ஏராளமான படங்களில் கவர்ச்சி வேடங்களில் தோன்ற ஆரம்பித்தார். அதனால் அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.
குசேலன்: சோனாவை பொறுத்தவரை கிளாமர் நடிகை என்பதை தாண்டி நல்ல நடிகை என்று குசேலன் படத்தில் நிரூபித்திருப்பார். அதிலும் அவருக்கு கவர்ச்சி வேடம்தான் என்றாலும் ஒரு சில சீன்கள் நன்றாகவே நடிக்க செய்திருப்பார். ஆனால் என்ன காரணத்தினாலோ சோனாவுக்கு கிளாமர் வேடங்களை தவிர்த்து வேறு எந்த வேடமும் பெரிதாக கிடைக்கவில்லை.

பிரச்னை: இதற்கிடையே சர்ச்சைகளிலும் அவர் சிக்குவதுண்டு. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு ஒரு பார்ட்டியில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, எஸ்.பி.பி சரண் ஆகியோர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார்கள் என்று புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பினார். அவர் புகார் கொடுத்த மூன்ற பேரும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்கவர்கள். இதன் காரணமாக இந்த விவகாரம் பெரிய புயலை கிளப்பியது. அதற்கு பிறகு அந்தப் பிரச்னை ஒரு வழியாக ஓய்ந்துவிட்டது.
நோ திருமணம்: அதேபோல் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சோனா ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அவர் அளித்த அந்தப் பேட்டியில், "நடிகைகள் சங்கீதா, சோனியா அகர்வால், ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் எனது தோழிகள். நான் கடைசி 8 வருடங்களாக குடிப்பதில்லை. இவர்களுடன் நான் டச்சில் இருக்கிறேன். ஆனால் நேரில் சந்திப்பதில்லை.
முதல் மீ டூ புகார்: சினிமாவில் பாலியல் பிரச்னை இருக்கிறது. முதன்முதலில் 2010ஆம் ஆண்டு நான்தான் மீ டூ புகார் கொடுத்தேன். அவர்கள் யார் என்று பலருக்கும் தெரியும். அவர்களது தரப்பிலிருந்து அந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு வந்தது. அதனையடுத்து நான் அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டுதான் அந்த பிரச்னையில் சமாதானம் ஆகிவிட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள். பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது. அப்படியெல்லாம் நான் அவர்களிடம் பணம் எல்லாம் வாங்கவில்லை.
நான் கிளாமர் ஹீரோயின் என்பதால் என்னை யாரும் திருமணம் செய்துகொள்ளவில்லையோ என தோன்றுகிறது. பலரும் என்னிடம் வந்து உன்னை வெச்சிக்குறேன் என்று சொல்வார்களே ஒழிய திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறியதில்லை.
என்னை வெச்சிக்குறேனு சொல்பவர்களை பார்த்து சில நேரம் கத்தியிருக்கிறேன், சண்டை போட்டிருக்கிறேன். சில சமயம் அப்படியே அவர்களை பார்த்துக்கொண்டிருப்பேன். எப்படி இப்படி கேட்க உங்களுக்கு மனது வருகிறது என்றுதான் எனக்கெல்லாம் தோன்றும்" என்றார்.


Click it and Unblock the Notifications











