காரைக்குடியில் 1500 பேர் என்னை.. விஷால் என்ன செஞ்சாரு தெரியுமா?.. பிரபல நடிகைக்கு என்ன நடந்தது?
சென்னை: நடிகை சோனா சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரை பக்கம் ஒதுங்கிவிட்டாலும், இப்போது தனது பயோபிக் படமான ஸ்மோக் படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்குகிறார். இந்த படத்திற்கான புரோமோசன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அவர் அளிக்கும் பேட்டியில், பல திடுக்கிடும் தகவல்களை எக்ஸ்க்ளூசிவாக தெரிவித்து வருகிறார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை சோனா தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர். பல படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், அவர் கவர்ச்சி நடிகையாக தன்னை மாற்றிக் கொண்ட பின்னர் ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையிலும் பெரும் கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் கிளாமர் டிராக் காட்சிகளிலும், கிளாமர் பாடல்களிலும் நடனமாடி வந்தார். இப்படி இருக்கும்போது, நடிகை சோனா காரைக்குடியில் தான் விஷால் உடன் ஒரு படத்தில் பாடலுக்காக ஆடும் போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அது வேகமாக பரவி வருகிறது.

விஷால்: இது மட்டும் இல்லாமல், விஷால் வந்து என்னிடம் பேசி எனக்கு நம்பிக்கை கொடுத்தார். நான் இருக்கிறேன். உனக்கு முன்னால் நான் இருப்பேன். நானும் ஆடும்போது நீ கூட்டத்திற்கு தெரியமாட்டாய் எனக் கூறினார். ஆனால், நான் வந்து ஆடினால் இந்த பக்கம் திரும்பினால் மொத்த கூட்டமும் அதே பக்கமும் திரும்பிப் பார்த்தார்கள். முதல் நாள் 400 பேர் இருந்தார்கள். இரண்டாவது நாள் 800 பேர் இருந்தார்கள். மூன்றாவது நாள் மற்றும் நான்காவது நாளில் சுமார் 1500 பேர்கள் கூடிவிட்டார்கள்.
ரேப்: அவர்களின் பார்வை மிகவும் மோசமானதாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால், அந்த 1500 பேரும் என்னைத் தொடாமல் ரேப் செய்துவிட்டார்கள்" எனக் கூறியுள்ளார். சோனாவின் இந்த பேட்டி பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் அவர் கூறுவது என்பது படப்பிடிப்புத் தளத்தில் நடிகைகள் எதிர்கொள்ளும் தர்மசங்கடமான விஷயங்களாக உள்ளன என பலரும் கூறிவருகிறார்கள். சோனாவின் பயோ பிக் படம் வெளியானால் திரைத்துறையில் இருக்கும் பல நட்சத்திரங்களின் முகத்திரை கிழியும் என திரைத்துறை வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது. இந்த பேட்டியில் சோனா மேலும் பேசும்போது, தனது குழந்தைப் பருவம் குறித்து பேசினார்.
பால்யம்: அப்போது தனது தந்தை தன்னை மிகவும் கொடுமைப் படுத்தினார் எனக் கூறினார். அதாவது, தனது தந்தை பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவர். எங்கள் பாட்டி வீட்டில் எப்போதும் இந்த பிரச்னை நடைபெற்றுக் கொண்டே இருக்கும் அதாவது எனது அப்பா வேறு ஏதாவது பெண்ணுடன் இருப்பார். இதனால் எனது அம்மா குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்டார். நான் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்று, எனது சம்பளத்தை அம்மாவிடம் கொடுப்பேன் எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











