எனக்கே அலுத்துப் போச்சு.. உங்களுக்கு அலுத்துப் போகலயா? இப்ப யாரு கேட்டாலும் நோ சொல்லீடுவேன் சோனா ஓபன்
சென்னை: நடிகை சோனா சமீபத்தில் அளித்து வரும் அடுத்தடுத்த பேட்டிகளால், பலருக்கும் ஷாக் மேல் ஷாக் கொடுத்து வருகிறார். தான் எழுதி இயக்கியுள்ள தனது பயோபிக் படமான ஸ்மோக் படத்தின் புரோமோசன் என்றாலும், இவர் கூறும் பல தகவல்கள் பலருக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சிலர் பெயரைச் சொல்லி அவர் கூறும் தகவல்கள் ரசிகர்களுக்கு எக்ஸ்க்ளூசிவ் என்பதால், சர்ப்ரைஸ் ஆகி வருகிறார்கள். அப்படிதான் ஒரு பேட்டியில் ஓபனாக பல சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
நடிகை சோனா தனது டீன் ஏஜில் சினிமாவுக்கு வந்தார். நடிகை ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவரை சினிமா உலகில் இருந்த பல மோசமானவர்கள் அவரது கனவை சிதைத்து விட்டார்கள் என்று கூறவேண்டும். ஒரு படத்தில் நடிக்கும்போது தனது மேலாடை சோனாவுக்கு அசௌகரியத்தை அளித்துள்ளது. ஆனால் அந்த படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் சோனாவுக்கு நேராகவும் பக்கவாட்டிலும் கேமராவை வைத்து சில காட்சிகளை எடுத்துக் காட்டியுள்ளார்கள். அதன் பின்னர் சோனா ஓ.கே. சொல்லியுள்ளார்.

அந்தப் படத்தை பார்க்க தனது மொத்த குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு தியேட்டருக்குப் போயுள்ளார். படத்தில் பார்த்தால் அவருக்கு ஏகப்பட்ட கிளாமர் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, பல காட்சிகள் டாப் ஆங்கிளில் கேமராவை வைத்து காட்சிகள் எடுத்துள்ளார்கள். இந்தக் காட்சிகளை திரையில் பார்த்ததும் நடிகை சோனா தனது குடும்பத்தினரை தியேட்டரை விட்டு வெளியே அழைத்து வந்துள்ளார். இது தொடர்பாக அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அலுத்துவிட்டது: இது மட்டும் இல்லாமல், அவர் அளித்த பேட்டியில் தனது மன வேதனையும் கொட்டியுள்ளார். அதாவது, என்னை இப்போதும் மாதத்திற்கு இரண்டு படங்களாவது நடிக்க கேட்டு வருகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் கிளாமர் கதாபாத்திரங்கள்தான். அப்படி கேட்டு வருபவர்களிடம் நான் கூறுவது எல்லாம் ஒரே விஷயம் தான். அதாவது, " எனக்கே கிளாமராக நடித்து அலுத்துப் போய்விட்டது. உங்களுக்கு அலுத்துப் போகவில்லையா?" என்று கேட்டு வருகிறேன் என்றும் நடிக்க முடியாது எனவும் பதில் அளித்து வருவதாக கூறியுள்ளார்.


சின்னத்திரை: அப்படியானவர்களை நான் கத்தி கூச்சலிட்டு திட்டி விரட்டிவிட்டுவிடுவேன்" என கூறியுள்ளார். சோனா தற்போது சின்னத்திரை தொடர்களில் வில்லியாக நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல், தனது வாழ்க்கை வரலாற்றை பயோ பிக் படமாக எடுத்து, அதை ரிலீஸ் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படம் வெளியானால் பல முன்னணி நட்சத்திரங்கள் குறித்தும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வரும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications