தனியா ஒரு பொம்பளையா போராடுறேன்.. நீதி கிடைக்கலனா செத்துடுவேன்... உண்ணாவிரதம் இருக்கும் சோனா!

சென்னை: தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர் சோனா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதில், பல நடிகர்கள் தன் மீது ஆசைப்பட்டனர் என ஓப்பனாக பேசியது மேலும் சர்ச்சையானது. தற்போது சோனா ஒரு பெரிய பிரச்னையில் சிக்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவிற்கென்று இருக்கும் பெப்ஸி அலுவலகத்தில் சோனா உண்ணாவிரதம் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள திரை ரசிகர்களிடம் ஆர்வமும் அதிகரித்துள்ளது.

நடிகை சோனா தனது தனிப்பட்ட வாழ்க்கை முறையில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டிகளே சான்றாக இருக்கிறது. பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஜோதிகாவின் தோழியாக வந்தாலும், அதற்கடுத்து கவர்ச்சி வேடங்களிலேயே ஏற்று நடித்தார். பிறகு அதே போன்ற வேடங்கள் வருவதாலேயே படத்தில் நடிப்பதையே குறைத்துகொண்டேன் என தெரிவித்தார். பின்னர், தனது அப்பா என்ன தவறானவள் என்று கூறியதாலோ என்னவோ நானும் அப்படி நடந்துகொண்டேன். ரொம்ப மோசமாக நடந்துகொண்டதையும் தெரிவித்தார்.

actress-sona-on-hunger-strike-at-fefsi-office

சோனாவின் பெயருக்கு பின்னாள் சர்ச்சைகளும் சொல்ல முடியாத பல ரகசியங்களே புதைந்து கிடக்கிறது. இந்நிலையில், நடிகை சோனா இயக்கி நடித்துள்ள ஸ்மோக் வெப் தொடர் விரைவில் வெளியாகும் என அவரே தெரிவித்திருந்தார். அதில், தான் மலையாள சினிமாவில் நடித்த போது ஒரு நடிகர் தன்னுடைய காலில் விழுந்து கெஞ்சிய விஷயத்தையும் பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில், ஸ்மோக் வெப் தொடர் வெளியாவதில் பெரும் சிக்கல் வெடித்திருக்கிறது. வெப் தொடரில் பணியாற்றிய மேனேஜர் ஷங்கர் எண்பவர் பணத்தை பெற்று ஏமாற்றிவிட்டதாக பகிரங்க குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

உண்ணாவிரதம்: பெப்ஸி அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் சோனா, ஒரு ஆடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். அதில், நான் 25 வருடமாக இந்த சினிமா இன்டஸ்ட்ரியில் இருக்கிறேன். எனக்கு எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்னை பிரச்னை தான் வருகிறது. கடந்த 10 வருடங்களாக என்னை வேலை பார்க்கவே விடுறது இல்லை. ஒருமுறை வாயை திறந்து ஒருத்தன் கையை வச்சுட்டான் சொன்னதுக்கே கம்முனு உட்கார வைச்சுட்டாங்க. நாம பேசுனா இப்படித்தான் உட்கார வைப்பாங்க தெரியும். நானும் மலையாளத்தில் படம் செய்தேன், நான் பாட்டுக்க என் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

ஸ்மோக் வெப் தொடர்: இது நமக்கு செட் ஆகாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், நானே ஒரு டீம் செட் பண்ணி ஓடிடி பிளாட்பார்முக்கு எனது வாழ்க்கை பயணத்தை வெப் தொடரா எடுக்க ஆரம்பித்தேன். அதுவும் நல்லாதான் போச்சு. ஸ்மோக் என்ற பெயரில் தான் எடுத்தேன். பூஜை போட்ட நாளில் இருந்தே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. மிரட்டல் இது அதுன்னு நடக்குது. நானும் எல்லா பிரச்னையும் தாண்டி புராஜக்ட் முடிச்சுட்டோம். வெப் தொடர் 2வது செடியூல் ஒரு மேனஜரை வைத்திருந்தோம். அவர் ஆல்ரெடி 2 படத்துல வொர்க் பண்ணியிருக்காரு. நல்லவர்னு நினைத்து நம்பிக்கையா இருப்பாருன்னு நினைச்சோம்.

actress-sona-on-hunger-strike-at-fefsi-office

போலீஸ்கிட்ட போ: அவனும் 4 நாள் சம்பளத்தை கொடுக்காம என்கிட்ட இருந்து பணத்தை வாங்கி ஏமாத்திட்டு கேமராமேன் டிபார்ட்மெண்டிடம் ஹார்ட் டிஸ்க் கொடுத்திட்டு போயிட்டான். நானும் இதுகுறித்து பெப்சியிடம் புகார் தெரிவித்தேன். புரெடியூசர் கவுன்சிலிலும் புகார் கொடுத்துட்டு பிரச்னையை கொஞ்சம் கொஞ்சமா ஷார்ட் அவுட் பண்ணி வெப் தொ்டரை முடிச்சுட்டேன். ஆனால், ப்ரோமோஷன் பணியில் தீவிரமா இருக்கப்போ, ஹார்ட் டிஸ்க் ஒன்னு இருக்கு அதை கொடுக்க மாட்டேங்குறாங்க. நானும் தனி பொம்பளை தான் போராடிட்டு இருக்கேன். பெப்சியில் இது பற்றி கேட்டா நீதான் ஆள் வச்சிருக்க.. போலீஸ்கிட்ட போவல்ல போ அங்கே போய் கம்ப்ளைண்ட் பண்ணு சொல்றாங்க என சோனா அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

இதற்கு மேலே என்னால முடியலை நான் செத்துதான் போகனும், சாகுற வரைக்கும் விடமாட்டேன் எனக்கு நீதி வேண்டும் நியாயம் வேண்டும் என சோனா கூறியுள்ளார். ப்ளிஸ் எனக்கு மீடியா நண்பர்கள் உதவ வேண்டும் என் பக்கம் நியாயம் இருக்கு என தெரிவித்தார். மேலும் மேனேஜர் ஷங்கர் என்பவர் சரியான பிராடா இருக்கான் அவனுக்கு ஆதரவா பெப்சி செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார் சோனா. பெப்ஸி அலுவலக வாசலில் சோனா உண்ணாவிரதம் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

FAQs
சோனா தமிழில் அறிமுகம் ஆன படத்தின் பெயர் என்ன?

பூவெல்லாம் உன் வாசம்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X